டெல்டா கொரோனாவால் ஆபத்து… பிரிட்டனுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த கொரோனா 3.0!

 

டெல்டா கொரோனாவால் ஆபத்து… பிரிட்டனுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த கொரோனா 3.0!

கொரோனா முதல் அலையால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பாதிப்பைச் சந்தித்தன. அப்போதே சுதாரித்துக்கொண்ட ஒருசில நாடுகள் இரண்டாம் அலையிலிருந்து தங்கள் மக்களைப் பாதுகாத்தனர். ஆனால் பிரிட்டன், பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் இந்த மூன்று நாடுகளிலும் உருமாறிய கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

டெல்டா கொரோனாவால் ஆபத்து… பிரிட்டனுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த கொரோனா 3.0!

பிரிட்டனில் உடனுக்குடனான ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும், தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியதாலும் இரண்டாவது அலையைப் பெரியளவில் கட்டுப்படுத்தி சாதித்தது. அந்நாட்டில் கிட்டத்தட்ட இரண்டாவது அலை ஓய்ந்துவிட்டது. இந்நிலையில் தற்போது அந்நாட்டில் மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக வைரஸ் மற்றும் தடுப்பூசி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பரவி வருவது மிகவும் ஆபத்தான டெல்டா வைரஸ் கொரோனா தான் மூன்றாம் அலையில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

டெல்டா கொரோனாவால் ஆபத்து… பிரிட்டனுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த கொரோனா 3.0!

முன்னதாக பிரிட்டனில் மூன்றாம் அலை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ரவி குப்தா கடந்த மாதம் கூறியிருந்தார். எந்தவொரு அலையாக இருந்தாலும் ஆரம்பத்தில் சிறிது சிறிதாக ஆரம்பித்து பின்னர் பெரும் தாக்குதலை ஏற்படுத்தும்; அதேபோல் தான் பெருமளவு குறைந்த கொரோனா பாதிப்பு, தற்போது மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. இதுவே மூன்றாம் அலைக்கான அறிகுறி என சொல்லியிருந்தார்.

டெல்டா கொரோனாவால் ஆபத்து… பிரிட்டனுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த கொரோனா 3.0!

அவர் சொன்னது போலவே மூன்றாம் அலை பிரிட்டனில் தொடங்கியிருக்கிறது. இரண்டாம் அலையைக் காட்டிலும் பிரிட்டனில் மூன்றாவது அலையின் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் பிரிட்டன் அரசு கவனமாக கையாள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். டெல்டா கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் முன்பை விட மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் மூன்றாம் அலை தாக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியது கவனிக்கத்தக்கது.