ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்; திமுக எம்.பி.கனிமொழி அஞ்சலி!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்; திமுக எம்.பி.கனிமொழி அஞ்சலி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்; திமுக எம்.பி.கனிமொழி அஞ்சலி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் 13 பேர் உயிரிழந்தனர். அத்துடன் பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் குமரெட்டியபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுக்கு மலர்தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தி கிராமத்தினர் அஞ்சலி செலுத்தினர்.அத்துடன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்; திமுக எம்.பி.கனிமொழி அஞ்சலி!

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை தமிழக அரசு நேற்று வாபஸ் பெற்றது. அத்துடன் நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இறந்த 13 பேர் மற்றும் படுகாயம் அடைந்த 4 பேர் உள்பட 17 பேரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் நேற்று அரசு வேலைக்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.