கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… ஒரே நாளில் 3,915 பேர் மரணம்!

 

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… ஒரே நாளில் 3,915 பேர் மரணம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. முதல் அலையை காட்டிலும் பன்மடங்கு அதிவேகமாக பரவும் இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், வட மாநிலங்களில் மோசமான சூழல் நிலவி வருகிறது. மருத்துவமனைகளில் இடமில்லாமல் நோயாளிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது.

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… ஒரே நாளில் 3,915 பேர் மரணம்!

இத்தகைய சூழலில், கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்திருந்தது. மூன்றாவது அலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,14,188 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… ஒரே நாளில் 3,915 பேர் மரணம்!

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,915 பலியாகி இருப்பதாகவும் 3,31,507 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் 36,45,164 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 2,14,91,598 ஆக அதிகரித்துள்ளதாகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,76,12,351 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.