சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம்: புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிரப்பித்துள்ளது.

அதன்படி, சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய ஏ.கே. விஸ்வநாதன் தமிழக செயாலகம் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட காவல் ஆணையர் டேவிட்சன் தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரேமானந்த் சின்கா மதுரை மாவட்ட காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி சிறப்பு காவற்படை ஈரோடு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு முக்கிய உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisment -

Most Popular

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!

ஊரடங்கு... எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் மாதக்கணக்கில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. முதல்நாள் பார்த்த தன் தந்தையின் முகத்தை மறுநாள் காலையில் பார்த்த பிள்ளைகள் இப்போது நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....

கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி அறிமுகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக...

ரத்தசோகை போக்கும் முளைக்கீரை வடை!

கீரை வடை... டீக்கடைகளிலும், ஹோட்டல்களிலும் சாப்பிட்ட இந்தக் கீரை வடையை வீடுகளிலும் செய்து சாப்பிடலாம். இன்றைய சூழலில் சுகாதாரமான, சுத்தமான உணவு கிடைக்குமா? என்ற ஏக்கம் உள்ளது. எனவே, நம் வீடுகளில் இந்தக்...

சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?- சிதம்பரம் கேள்வி

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில்,...
Open

ttn

Close