ஆட்டிப்படைத்த கொரோனா… ரயில்வே துறைக்கு 36 ஆயிரம் கோடி இழப்பு: மத்தியமைச்சர் தகவல்!

 

ஆட்டிப்படைத்த கொரோனா… ரயில்வே துறைக்கு 36 ஆயிரம் கோடி இழப்பு: மத்தியமைச்சர் தகவல்!

கொரோனாவால் ரயில்வே துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் அலையின் போது பல மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்ததால் ரயில் சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தன. பின்னர், ரயில்சேவை மீண்டும் செயல்படத் தொடங்கிய போது இரண்டாவது அலை பரவத்தொடங்கியது. மறுபடியும் ரயில் சேவைகளை முடக்க வேண்டிய கட்டாயம் நிலவியது. மலிவான விலை என்பதால் மக்கள் பெரும்பாலும் ரயில்களையே தான் பயன்படுத்துகிறார்கள். எனினும் வருமானத்தை விட அதற்கான பராமரிப்பு செலவுகள் அதிகமாவதாக கூறப்படுகிறது.

ஆட்டிப்படைத்த கொரோனா… ரயில்வே துறைக்கு 36 ஆயிரம் கோடி இழப்பு: மத்தியமைச்சர் தகவல்!

இந்த நிலையில், கொரோனா காலக்கட்டத்தில் ரயில்வே துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் ராவ்சாகேப் தான்வே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், பயணிகள் ரயில் இழப்பை ஏற்படுத்துவதாகவும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதையும் செய்ய முடியாது என்றும் கொரோனா காலத்தில் மட்டும் ரயில்வே துறைக்கு 36 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

சரக்கு ரயில்கள் மட்டுமே நல்ல வருமானம் ஈட்டி தருவதாகவும் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்ததில் சரக்கு ரயில்கள் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ரயில்வேத் துறை அர்ப்பணிக்கப்பட்ட மேற்கு சரக்கு வழித்தடத்தை கையில் எடுத்துள்ளதாகவும் மும்பை – நாக்பூர் விரைவு தடத்தில் புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.