நாம் தமிழர் கட்சியின் 35 வேட்பாளர்கள் – பட்டியலை வெளியிட்ட சீமான்

 

நாம் தமிழர் கட்சியின் 35 வேட்பாளர்கள் – பட்டியலை வெளியிட்ட சீமான்

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் மற்ற கட்சியினர் இருக்க, 234 தொகுதிகளுக்கும் நாங்கள் வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம் என்று சொல்லி இருந்தார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அதன்படியே இன்று 35 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் 35 வேட்பாளர்கள் – பட்டியலை வெளியிட்ட சீமான்

புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் 35 வேட்பாளர்களை அறிவித்தார்.

நாம் தமிழர் கட்சி ஓவைசியுடனும் கமல்ஹாசனுடனும் இணைந்து போட்டியிடப்போவதாகவும், மூன்றாவது அணி அமைக்கப்போவதாகவும் பேச்சு எழுந்த நிலையில், தனித்துதான் போட்டி என்று அடித்துச் சொன்னது மாதிரியே தனது வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டுகிறார் சீமான்.

எப்போதும் போலவே இப்போதும் தனித்தே போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஆணுக்கு பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் 50 சதவிகித இடங்களை ஒதுக்குகிறது. அந்த வகையில் 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் என்று முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி இறுதிக்கட்டதை எட்டியிருக்கிறது.

இதுவரைக்கும் நிறைவடைந்த வகையில் தற்போது 35 வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்திருக்கீறார் சீமான்.