சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

 

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

ஞாயிற்றுக்கிழமை எப்பிசோட். எவிஷன் இருக்கும். மீதமிருக்கும் பஞ்சாயத்துகள் முடிக்கப்படும், என்ன புத்தகம் பரிந்துரைக்கப்படும்.. என ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தன. அதற்கு பெரியளவில் ஏமாற்றம் இல்லை. ஆனால், எவிஷனான நபரில்தான் பெரிய அதிர்ச்சியைத் தந்தது நேற்றைய எப்பிசோட்.

ஞாயிற்றுக்கிழமை

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

‘நான் என்ன பொய் சொன்னேன்..’ ‘வாயை மட்டும் வெச்சிட்டு வந்தேன்னு எப்படிச் சொல்லலாம்?’ ‘நான் எப்படி ஃபேக்?’ என முக்கோணாச் சண்டையாக சம்யுக்தா, ஆரி, பாலா மோதிக்கொண்டதிலிருந்து ஆரம்பித்தது இன்றைய காட்சிகள்.

ஆரியை வெறுப்பேத்தும் விதமாக, ‘நீங்க அழுதுதான் கேப்டனாகினீர்கள்’னு பாலா சொன்னதும் எப்படி ரியாக்ட் செய்வது என சில நொடி குழம்பிட்டார் ஆரி. ஆனா, இன்னும் ஓரிரு நாளில் இவர்கள் சமாதானம் ஆகும் சூழல் வந்தாலும் அதை சம்யுக்தா அனுமதிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

டைனிங் டேபிள்கிட்ட ‘நான் என்ன பொய் சொன்னேன்’னு சொல்லுங்க’னு பாலா ஆரியைக் கார்னர் செய்ய, ‘நான் சொல்றேன்’னு கரெக்டா மூக்கை நுழைச்சது ஷனம். நோஸ் கட் பண்ணும் விதமாக பாலா ‘ச்சே’னு சொல்லிட்டு, நாற்காலியை கீழ தள்ளி உடைச்சிட்டு போனார். ‘உங்க சண்டையில் பர்னிச்சரை ஏண்டா உடைக்கிறீங்க?’ இது பிக்கியின் மைண்ட் வாய்ஸ் (ஸாக இருக்கலாம்)

கறுப்பு நிற பேண்ட், வெள்ளை நிற சட்டையில் எண்ட்ரியான கமலைப் பார்த்து ‘சார் வக்கீல் ட்ரெஸ் மாதிரி இருக்கே”என கமெண்டினார் ரம்யா. அதை ரசித்துக்கொண்டே, ‘வக்கீல் பையன்தான்’ என ஆரம்பித்தார். நல்லவேளை ஃப்ளாஸ்பேக் ஏதுமில்லை.

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

காற்று மாசுபாடு பற்றி ஒரு மாதிரி விளக்கி, தீபாவளி வாழ்த்துகள் சொன்னார் கமல்.

‘நீதி மன்றத்தில் நீதி கிடைச்சுதா?’என பஞ்சாயத்தைத் தொடங்கி வைத்தார் கமல். ‘சிலருக்குக் கிடைச்சுது… ஃபேவரிஸம் இருந்துச்சு. பாலா திடீர்ன்னு ஷனம்க்கு ஆதரவா வந்தது ஆச்சர்யம்’னு என்பதை லென்த்தாக நீட்டிக்கொண்டே செல்ல, அழகாக அவரை கையமர்த்தினார் கமல்.

”எனக்கு பாலா சப்போர்ட் பண்ணியதுக்கு ஆச்சர்யமா இருக்கு’னு சொல்ல, ‘நீ மட்டுமல்ல, யார் இந்த நிலைமையில இருந்தாலும் உதவி செய்வேன்’னு 80’ஸ் ஹீரோ டயலாக்கைக் கொஞ்சம் மாத்திப் பேசினார் பாலா.

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

‘நீதிமன்றத்தில் ஓட்டெடுப்பு முறை சரியல்ல’ என்று சரியாகக் கொட்டினார் கமல். ஆமா, ஓட்டெடுப்புதான் தீர்வுன்னா வழக்காடு மன்றம் கான்செப்ட்டே வேண்டாமே… சோபா ஏரியாவுலேயே முடிச்சிருக்கலாமே?

‘சம்யுக்தா, பாலாவுக்கு காட்டப்பட்டு சலுகை ஷனம்க்கு கொடுக்கவில்லையோ?’ என்று இழுத்தபடியே விசாரித்தார் கமல். அப்படியெல்லாம் இல்லையே… சம்யுக்தா கேப்டன் என்பதால்… என ஜட்ஜ் சுசி கொடுத்த விளக்கம் அவருக்கே எதிரானது. ‘நான் ஜட்ஜாக இருந்து ஆதிக்கம் செலுத்தாமல், சகப் போட்டியாளராக நல்லுறவை வளர்க்க விரும்பினேன்’ என சுசி சொன்னது உண்மைன்னா, ஏன் ஷனமிடம் அந்த நல்லுறவு கதை வரவில்லை.

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

சம்யுக்தாவைப் பார்த்து மூன்று முறை ‘தறுதல’னு கத்தினதுக்கு சுற்றிவளைத்து மன்னிப்பு கேட்க வைத்தார் கமல். அவருக்கு அதிக வேலை தராமல், சட்டென்று மன்னிப்பும் கேட்டார் ஆரி. அப்படியெனில், ஆரியின் வளர்ப்பு குறித்தும், அவன் இவன் என்று சம்யுக்தா பேசியதற்கு ஆரியிடம் மன்னிப்பு கேட்க வைத்திருக்க வேண்டும் இல்லையா… கமல் பல பஞ்சாயத்துகளை சம்பந்தப்பட்டவர்களின் மூஞ்சில் அடிப்பது போல கையாள்வது இல்லை என்பது நல்ல விஷயம்தான். ஆனால், அதுவே சம்யுக்தாவை தப்ப விட்டதுபோல, பல நேரங்களில் பலரையும் தப்ப விடவும் செய்துவிடுகிறது.

நண்பர்கள் குரூப்பில் பணக்கார வீட்டுப் பையன் ஒருத்தன் இருந்தால் எப்படி அலட்டலோடு நடந்துகொள்வானோ, அதேபோன்ற தோரணையில்தான் பிக்பாஸ் வீட்டில் சம்யுக்தாவின் நடவடிக்கைகளும் மற்றவர்களிடம் பழகும் விதமும் இருக்கிறது. அவர் கண்டிக்கப்பட வேண்டிய பஞ்சாயத்துகளில் தப்ப விடுவது இன்னும் அவரது ஆட்டிடியூட்டை அதிகப்படுத்தி விடும்.

ரம்யா, ரியோ இருவரும் நல்லா வாதாடியதால் கமலால் பாராட்டுகளைப் பெற்றார்கள். நிஜமாகவே பாராட்டுறாரா… இல்ல லீட் எடுத்து அடுத்த பஞ்சாயத்துக்கு வருகிறாரான்னு குழம்பிக்கிட்டே அந்தப் பாராட்டை வாங்கிட்டார் ரியோ. உங்களுக்கு ஏதாச்சும் கேஸ்னாகூட கொடுங்க சார் பேசித்தீர்த்திடலாம்னு கமலையே கலாய்த்திட்டு இருந்தார் ரம்யா. கெத்துதான் போங்க.

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

கோர்ட் காட்சிகளில் சரிந்தபடியே ஆடியன்ஸாகி ரசித்த ரமேஷ்க்கு சரியான குட்டு வைத்தார். சோஷியல் மீடியாவில்கூட நாம வெளியிலிருந்து பிக்பாஸ் பார்க்கிறோம். ஜித்தன் ரமேஷ் உள்ளேயிருந்துட்டு பார்க்கிறார் அவ்வளவுதான் வித்தியாசம்’ என ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அதன் எதிரொலியாகக் கூட கமலில் கேள்வி அமைந்திருக்கலாம்.

ரியோ டூ நிஷா கேஸ் தொடர்பாக வந்தார் கமல். ’வெளியில என் பேச்சைக் கேட்டுதான் நிஷா நடக்கிறதா சுசி சொன்னாங்க… அதை மாத்தறதுக்காக கேஸ் போட்டேன் சார்’னு உண்மையை ஒத்துக்கொண்டார். அதற்கு ஒரு விளக்கம் கொடுப்பதற்காக எழுந்த சுசி, ‘நீங்க சொன்னதைத்தான் நான் சொன்னேன்’னு கமலையே கோர்த்துவிட, உஷாராகி ஆடியன்ஸ் பக்கம் கைக்காட்டி எஸ்கேப்பினார் கமல்.

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

அர்ச்சனாவின் ஆர்.ஜெவாகச் சிறப்பாகச் செய்தார் என இழுத்து, அர்ச்சனா சேஃப் என்க, நிம்மதியானார். ஆனால், ‘நாங்க பாடுறோம் . ஆடுறோம். அதெல்லாம் வெளியில தெரியுதான்னு தெரியல. சனிக்கிழமை நைட்தான் தூக்கமே வராம கஷ்டப்படுறோம்’னு சொல்ல, ‘என்னது… சனிக்கிழமை இரவா… நான் வர்றதாலா?’ என்று டைமிங்கை மிஸ் பண்ணாமல் கேட்டார் கமல். அப்போதான் அந்த கோணம் புரிந்த அர்ச்சனா, தோசையைத் திருப்பிப் போட்டார்.

பாலாவின் ஆட்டிடியூட் பற்றி ஒரு பிடி பிடித்தார் கமல். தன்னிலை விளக்கமாக சொன்னதையும் மறுத்து பேசி அடக்கினார். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல’னு சம்யுக்தாவும் ஷிவானியும் இந்நேரம் சமாதானப் படுத்தியிருப்பார்கள். ஆனால், பாலாவின் நடவடிக்கைகள் ரசிகர்களால் விரும்பப்படவில்லை என்பதே உண்மை.

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

இந்த நேரம் ஷனம் சரியாக, நாற்காலியை உடைச்சதைச் சொல்ல, அதற்கும் பாட்டு கிடைத்த்து பாலாவுக்கு. உடல்மொழியைப் பற்றி சிறிய வகுப்பு எடுத்தபிறகு, ஆரி எவிக்‌ஷனிலிருந்து காப்பாற்றப்பட்டத்தை அறிவித்தார் கமல்.

‘எனக்கு சந்தோஷமில்ல. லோகத்துல யாரும் நல்லவா இல்ல…’னு கண்ணுல ஜலம் வெச்சுண்டார். அதற்கு அவார்ட் ஃப்ங்கஷனில் பேசுவதுபோல லென்த்தா பேச… முடியல. இன்னிக்கே இப்படி இன்னும் ஒருவாரம் கேப்டன் வேற என்னென்ன… எவ்வளவு நேரம் பேசப்போறாரோ (இது பிக்கியின் மைண்ட் வாய்ஸ்)

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

பாலா, அனிதா காப்பாற்றப்பட்டதச் சொன்னதும் பலருக்கும் ஆச்சர்யம்தான். மீதமிருந்த நால்வரை விட பாலாவுக்கு வாக்குகள் அதிகம் கிடைத்திருக்க வாய்ப்பில்லையே’னு முணுமுணுத்திருப்பார்கள்.

சோம்ஸ், சுரேஷ், ஷனம் என மூவருமாக மீந்திருக்க, லேசான இழுபறியோடு ‘சுரேஷ்’ பெயரைச் சொல்லி வெளியேறச் சொன்னார் கமல். நிச்சயம் பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏனெனில், இன்று இரண்டு விதமான முடிவுகளே வர வாய்ப்பிருப்பதாகப் பேசப்பட்டது.

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

ஒன்று.. கமல் பிறந்த நாளையொட்டி எவருமே எவிக்‌ஷன் இல்லை. இரண்டாவது, எதுவுமே பண்ணாமல் இருக்கும் சோம்ஸ் வெளியேற்றப்படுவார். ஆனால், சுரேஷ்க்கு சோஷியல் மீடியாவிலும் சப்போர்ட் இருந்தது. அவர் வெளியேற்றப்படுவார் என்று பலரும் நினைத்திருக்க மாட்டார்கள். (வெளியே வந்தபோது ‘இவர் வெளியேற நான் காரணம் என நினைக்காதீர்கள். மக்களால்தான் வெளியேறுகிறார் என்று கமல் சொன்னபிறகுதான் எவிக்‌ஷனின் சந்தேகம் வந்தது)

‘நான் சாப்பிட்டதை ஒரு வாரம் சாப்பிடல’னு அர்ச்சனா அழ, தாத்தாவைப் பிரியும் வலியும் கேபி அழ மற்றவர்கள் விடைகொடுக்க அதிகம் அழாமல் செண்டிமெண்ட் வார்த்தைகள் இன்றி வெளியேறினார் சுரேஷ்.

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

’அதெப்படி உடனே விடுவோம்’ என வெளியே வந்த சுரேஷை வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொருவர் பற்றியும் கமெண்ட் (கொளுத்தி) போடச் சொன்னார்கள். அதற்கு முன் வீட்டுக்குள் இருந்த குரூப்பிஸம் பற்றி விலாவாரியாகப் பேசிய சுரேஷ், நேரில் ஹவுஸ்மேட்ஸைப்  பார்த்ததும் அடக்கியே வாசித்தார்.

’பிக்பாஸ் 4 சீசன்களிலேயே கேப்டன் என்பதை கெட்ட வார்த்தைனு நினைச்சது நீங்கதான்’ – இது சம்யுக்தாவுக்கு. ‘உங்களைப் பார்த்தான் எனக்குப் பயம்’ இது அனிதாவைப் பார்த்து. ‘இண்டெலிஜெண்ட் கிட்’ இது கேபிக்கான வாழ்த்து. டேஞ்சரான போட்டியாளர் – இது வேற யாருக்கு ரம்யாவுக்குத்தான்.

சுரேஷ் வெளியேற்றம்… அதிகம் வருத்தப்படுபவர் இவர்தான்! –பிக்பாஸ் 35-ம் நாள்

சுரேஷ்க்கான குறும்படத்தைப் போட்டுக்காட்டி, விடைகொடுத்தார் கமல். சுரேஷ் வெளியேற்றத்திற்கு அதிகம் வருத்தப்படுபவர் அநேகமாக பிக்பாஸ் எடிட்டராகத்தான் இருப்பார். சண்டை, எமோஷனல், சமையல், போட்டியில் ஈடுபாடு, நடிப்பு என தினந்தோறும் ஏதோ ஒருவகையில் கண்டண்ட் கொடுப்பது சுரேஷ்தான். அவரையும் வெளியே அனுப்பிட்டால், எப்படிய்யா ஒன்றரை மணிநேரம் கண்டண்ட் தேத்தறது?

இந்த வாரம் புத்தகப் பரிந்துரையில் இடம்பெற்றது… ரா.கி.ரங்கராஜன் எழுதிய ‘அடிமை காதல்’ புத்தகம். ‘அறிஞர் அண்ணா முதல்வர் ஆவதற்கு சில வாரங்களுக்கு முன்பே ‘காஞ்சிபுரத்தானின் கொடி, ஜார்ஜ் கோட்டையில் பறக்கும்’ என கணித்தவராம் ரா.கி.ர. அவரோடு மகாநதி படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ஜெயமோகன், தொ.பரமசிவம் என சீரியஸ் வகை புத்தகங்களை அறிமுகப்படுத்தி வந்தவர் அதிலிருந்து சற்று விலகிய வெகுசன எழுத்தாளர் என அறியப்படும் ரா.கி.ர வின் நூலை அறிமுகப்படுத்தியது ஆச்சர்யமே. அடுத்தடுத்த வாரங்களில் சுஜாதா நூல் இடம்பெறக்கூடும்.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.