3500ல் இருந்து 1௦௦௦ கோடிக்கு இறங்கிவந்த எடப்பாடி! – இதையாவது தருவாரா மோடி?

3500ல் இருந்து 1௦௦௦ கோடிக்கு இறங்கிவந்த எடப்பாடி! – இதையாவது தருவாரா மோடி?

தமிழகத்துக்கு உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1000ம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதையாவது நிறைவேற்றுவாரா மோடி என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

modi-with-mask-89

கொரோனாவை எதிர்கொள்ள தமிழகத்துக்கு ரூ.3500 கோடி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், ரூ.510 கோடிதான் தமிழகத்துக்கு ஒதுக்கியது மத்திய அரசு. ஆனால், கொரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு எல்லாம் அதிக அளவில் நிதியை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்தை புறக்கணித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இன்று நடந்த பிரதமர், முதலமைச்சர்கள் வீடியோ கான்ஃபரன்சில் தமிழகத்துக்கு உடனடியாக ரூ.1000ம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

modi-in-video-conference

மேலும், பருப்பு, மசாலா பொருட்கள் மாநிலங்களுக்கு இடையே லாரி மூலம் விநியோகிக்கவும், வேளாண், தோட்டக்கலைத் துறைக்கு சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். இப்போதாவது பிரதமர் தமிழகம் கேட்ட தொகையை ஒதுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.