35 ஆண்டுகளுக்கு பின்னர் திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றும் திமுக ..

 

35 ஆண்டுகளுக்கு பின்னர் திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றும் திமுக ..

திண்டுக்கல்:   எம்.ஜி.ஆர். 1971-ம் ஆண்டு முதன் முதலில் கட்சி ஆரம்பித்தவுடன் சந்தித்த தேர்தல் திண்டுக்கல் பகுதி மக்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் தான்.

திண்டுக்கல்:  1971-ம் ஆண்டு எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தும் அவர் சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் மக்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் தான். இங்கு அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் சுமார் 2,60,824 வாக்குகள்  பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதெல்லாம் அன்றைய வரலாறு.

அதனால் திண்டுக்கல் தொகுதி என்றாலே எம்ஜிஆருக்கு ஒரு தனி  விருப்பம் தான். அதனால் தான் ஜெயலலிதா மறைவு வரை அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்களே திண்டுக்கல்லில் களம் கண்டு வந்தனர். இந்த தொகுதி உருவாக்கப்பட்ட 1952-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் இந்த தொகுதியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான்  மாறி மாறி வெற்றி பெற்று வந்தன.

dmk

 

இந்நிலையில் இம்முறை நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக  கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. வுக்கு அக்கட்சி திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கியதில் அக்கட்சியினர் படு அப்செட்டாகினர். இந்த தொகுதியில் பாமக  வேட்பாளராக ஜோதிமுத்து, தி.மு.க. சார்பாக வேலுச்சாமி , அ.ம.மு.க. சார்பாக ஜோதிமுருகன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் சுதாகர், நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் களம்  கண்டனர். 

stalin

குறிப்பாக அதிமுக சார்பில் யாரை நிறுத்தினாலும் இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் அதிமுகவும், அ.தி.மு.க.வுக்கு ராசியான தொகுதி என்று திமுக எண்ணியதாலும் பெரும்பாலும் தி.மு.க. போட்டியிடுவதை தவிர்த்து கூட்டணி கட்சியினருக்கே இந்த தொகுதியை ஒதுக்கி வந்தது. ஆனால் தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் . தனது வேட்பாளரை நிறுத்தியது தி.மு.க.

அதன் பிரதிபலனாக இந்த தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வருவதால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய திண்டுக்கல்லை தி.மு.க. கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.