சிங்கப்பூர், ரஷ்யா, ஹாங்காங்கில் இருந்து 348 இந்தியர்கள் மீட்பு – சென்னை விமான நிலையம் வந்தனர்

சிங்கப்பூர், ரஷ்யா, ஹாங்காங்கில் இருந்து 348 இந்தியர்கள் மீட்பு – சென்னை விமான நிலையம் வந்தனர்

சென்னை: சிங்கப்பூர், ரஷ்யா, ஹாங்காங்கில் இருந்து 348 இந்தியர்கள் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலால் உலகின் பல்வேறு நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான இந்தியர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து அவ்வாறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு பல சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. அவற்றின் மூலம் பல நாடுகளில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சொந்த நாடு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர், ரஷ்யா, ஹாங்காங்கில் இருந்து 348 இந்தியர்கள் மீட்பு – சென்னை விமான நிலையம் வந்தனர்

அந்த வகையில் சிங்கப்பூர், ரஷ்யா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து 348 இந்தியர்கள் மீட்கப்பட்டு மூன்று சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அதாவது சிங்கப்பூரில் இருந்து 178 பேரும், ரஷ்யாவில் 144 இருந்து பேரும், ஹாங்காங்கில் 26 இருந்து பேரும் மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அனைவரும் 14 நாட்கள் தனிமையில் இருக்க அனுப்பப்பட்டுள்ளனர்.