34 ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி !

 

34 ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி !

புதிதாக உதயமான மாவட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 

தமிழகத்தில் உள்ள, வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று 3 மாவட்டங்களாகவும், நெல்லை மாவட்டம் நெல்லை, தென்காசி என்று 2 மாவட்டங்களாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என்று 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இதன் படி, புதிதாக உதயமான மாவட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 

edapadi palanisamy

அதன் படி, கடந்த 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டத்தைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் 34 மாவட்டமான  கள்ளக்குறிச்சி மாவட்டத்தை, கள்ளக்குறிச்சியில் உள்ள  சாமியார் மடம் மைதானத்தில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

kallakurichi

இந்த நிகழ்ச்சியைத் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமை தாங்குகிறார். புதிய மாவட்டத்தைத் திறந்து வைத்த பின்னர் எடப்பாடி அம்மாவட்டத்திற்கான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்கள், மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.