33 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஜெ., மகிழ்ச்சியாக இருந்த அந்த ஒரு நாள்..

 

33 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஜெ., மகிழ்ச்சியாக இருந்த அந்த ஒரு நாள்..

காவேரி பிரச்சனையை தீர்ப்பதற்கு காவேரி நடுவர் மன்றம் நிறுவப்பட்ட 17 ஆண்டுகள் கழித்து 2006ம் ஆண்டில் திமுக – காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது. பெற்ற தீர்ப்பினை உறுதி செய்வதற்கு காவேரி நதிநீர் ஆணையம் வேண்டும் அப்போது அம்மா சொன்னார். ஆனால் அதற்கு சட்டத்திலே இடமில்லை என்று சொன்னார்கள் கருணாநிதியும், துரைமுருகனும். அதற்கு பிறகு ஏழு ஆண்டுகள் உச்சநீதிமன்றத்தில் வாதாடி, போராடித்தான் காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பெற்றுத்தந்தார் அம்மா என்றார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

33 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஜெ., மகிழ்ச்சியாக இருந்த அந்த ஒரு நாள்..

முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் மேலும் பேசியபோது, ‘’காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத்தந்த ஒரெ தலைவர் அம்மா. அதனல்தான் தஞ்சையில் அவருக்கு நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது. அதில் பேசிய அம்மா, எனது 33 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்த ஒரு நாள் எது என்று சொன்னால் காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத்தந்த அந்த நன்னாள் தான் என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.

ஆட்சியிலே இருக்கும்போது தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளுக்கு பங்கம் ஏற்படுகின்ற போது அதை பெற்று தருகின்ற ஆட்சியாளராகவும் தலைவராகவும் செயல்பட்டார் அம்மா’’என்றார்.

ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வை துணைமுதல்வர் பகிர்ந்துகொண்டபோது அதிமுகவினரும் நெகிழ்ந்தனர்.