ரூ.33 கோடியில் துணை மின் நிலையம்- முதலமைச்சர் தொடங்கி வைப்பு

 

ரூ.33 கோடியில் துணை மின் நிலையம்- முதலமைச்சர் தொடங்கி வைப்பு

ஈரோடு மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பிலும், 33 கோடி மதிப்பிலும் துணை மின் நிலையங்கள் அமைக்கும் திட்டத்தினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

எரிசக்தித் துறை சார்பில் ஈரோடு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களில் 353 கோடி மதிப்பீட்டில் 25 துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.33 கோடியில் துணை மின் நிலையம்- முதலமைச்சர் தொடங்கி வைப்பு

இதனை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில், நம்பியூர் வட்டம், ந.மேட்டுப்பாளையத்தில் 10 கோடியே 61 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒரு துணை மின் நிலையம் அமைய உள்ளது. கணபதிபாளையம் அருகே 34 கோடியே 75 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், பி.தங்கமணி தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பு, மின் பராமரிப்பு செலவுகளை குறைக்கும் வகையிலும், சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியம் என தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.