ஊரங்கு நீட்டிப்பில் கூடுதல் தளர்வுகள்: ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி

 

ஊரங்கு நீட்டிப்பில் கூடுதல் தளர்வுகள்: ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி

ஜூலை 31ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 19ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைந்த இருக்கிறது. இந்த ஊரடங்கினை நீட்டிப்பது குறித்தும், அடுத்து என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்த ஆலோசனைக்கு பின்னர் ஊரடங்கினை நீட்டித்து அறிவித்து, கூடுதல் தளர்வுகளையும் அறிவித்துள்ளார் முதல்வர்

ஊரங்கு நீட்டிப்பில் கூடுதல் தளர்வுகள்: ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி

திரையரங்குகள், நீச்சல் குளங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுக்கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்களுக்கும் தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நீங்கலாக மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தடை தொடரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் பள்ளிக்குவந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாக பணிகளும் தொய்வின்றி நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் இல்லை. நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி.ஐ. மற்றும் தட்டச்சு நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.