பழனி சண்முகா நதியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை…

 

பழனி சண்முகா நதியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை…

திண்டுக்கல்

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சண்முகா நதியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள வரதமா நதி, பாலாறு-பொருந்தலாறு மற்றும் குதிரையாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் 3 அணைகளில் இருந்தும் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை நிலவரப்படி பாலாறு – பொருந்தலாறு அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 956 கனஅடி நீரும், வரதமா நதி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பழனி சண்முகா நதியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை…

இந்த இரு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், பழனி சண்முகா நதியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் சென்றுகொண்டு உள்ளது. இதனால் சண்முகா நதியின் கரையில் வசிக்கும் பொதுக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், ஆற்றில் இறங்கவே குளிக்கவே செல்ல வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், ஆற்றின் கரை பகுதிகளில் வருவாய் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல், பழனியில் உள்ள மற்றொரு நீர்த்தேக்கமான குதிரையாறு அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.