3000 டாஸ்மாக் கடைகளில் 6000 சிசிடிவி கேமரா…பேசாம குடியை நிறுத்திரலாம் குமாரு…

 

3000 டாஸ்மாக் கடைகளில் 6000 சிசிடிவி கேமரா…பேசாம குடியை நிறுத்திரலாம் குமாரு…

டாஸ்மாக் கடைகளில் குறைந்தபட்ச விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசு நீண்ட நெடுங்காலமாக உதார்விட்டுக்கொண்டிருந்த டாஸ்மாக்கில் சிசிடிவி கேமரா பொறுத்துமின்னும் 20 நாட்களில் நடைமுறைக்கு வருவதாகவும் அதன் பிறகு கடை ஊழியர்களும் குடிகாரர்களும் தீவிர கண்காணிப்புக்கு ஆளாவார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tasmaac

தமிழகத்தில் 3,590 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் 3 ஆயிரம் கடைகளில் 6 ஆயிரம் கண்காணிப்பு கேமரா அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வீடியோ மேனேஜ்மெண்ட் சிஸ்டம் (வி.எம்.எஸ்) என்ற பெயரில் கண்காணிப்பு கேமரா திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மண்டலம் மற்றும் தலைமை அலுவலகம் என இரு அளவில் கண்காணிப்பு பணி நடத்தப்படும். டாஸ்மாக் கடைகளின் விற்பனைகளில் முறைகேடு நடப்பதாக தெரியவந்துள்ளது. பெட்டி பெட்டியாக மதுபானங்களை கடத்தி பாரில் வைத்து விற்பனை செய்வதும், முறைகேடாக விற்பனை செய்பவர்களுக்கு சப்ளை செய்வதும் நடக்கிறது. 

alcohol

குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் நேர விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. பெட்டிக்கடை, ஓட்டல்களில் மதுபானம் விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோர் விதிமுறை மீறி பாட்டில்களை வழங்குவதும் கடையை  மூடிய பிறகு ரெகுலர் கஷ்டமர்களுக்கு சிக்னல் முறையில் சரக்கு வழங்குவதும் இனி நடக்காது.

டாஸ்மாக் கடைகளில் குறைந்தபட்ச விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கேரளா, கர்நாடகா மாநிலங்களை போல் வி.எம்.எஸ் திட்டத்தை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பரில் டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்த நிறுவனங்களின் மதிப்பீடு தொகை அதிகமாக இருந்ததால் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. தற்போது 2வது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டது. வரும் ஜூலை 10ம் தேதி இதற்கான டெண்டர் திறக்கப்படவுள்ளது. 15 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா திட்டம் செயலாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு கடையிலும் இரு கேமரா வீதம் 6 ஆயிரம் கேமரா அமைத்து குரல் பதிவுடன் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடியே விற்பனை நிலவரங்களை ஆய்வு செய்யலாம்.

நாங்கள்லாம் அப்பல்லோவுலேயே சிசிடிவியை இல்லாம பண்ணினவங்க…டாஸ்மாக்குல ஃபிக்ஸ் பண்ண அடுத்த நாள் க்ளோஸ் பண்ணிரமாட்டோமா?