3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த தாத்தா !

 

3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த தாத்தா !

எம்.என்.சியின் முன்னாள் தலைவராக இருந்த ஹரி பாஸ்கரன்  சென்னையில் இருந்து டெல்லிக்கு சைக்கிளில் பயணிக்க திட்டமிட்டார். அதாவது சுமார் 3,000 கி.மீ தூரத்தை சைக்கிளில்  கடக்க முடிவு செய்தார்.

டெல்லி :

தெற்கு டெல்லியில் உள்ள ஷேக் சாராய் பகுதியைச் சேர்ந்த ஹரி பாஸ்கரனுக்கு வெகு நாட்களாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்ததாம். சரி செய்து விடலாம் என முடிவு செய்து களத்தில் இறங்கிய போது ஹரி பாஸ்கரனுக்கு வயது 70. ஆம், கடந்த ஜனவரி 8 – ஆம் தேதி தனது 70 வயதைப் பூர்த்தி செய்த இவர் சைக்கிளில் 3000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க முடிவு செய்திருக்கிறார்.

சென்னையிலிருந்து டெல்லிக்கு 

எம்.என்.சி-யின் முன்னாள் தலைவராக இருந்த ஹரி பாஸ்கரன்  சென்னையில் இருந்து டெல்லிக்கு சைக்கிளில் பயணிக்க திட்டமிட்டார். அதாவது சுமார் 3,000 கி.மீ தூரத்தை சைக்கிளில்  கடக்க முடிவு செய்தார். ஜனவரி 21 – ஆம் தேதி தமிழகத்தில் சைக்கிள் பயணத்தை தொடங்கி, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் வழியாக மார்ச் 17 -ஆம் தேதி ஹரியானா சென்றடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு தனது 57 நாட்கள் பயணத்தை மார்ச் 18 – ஆம் தேதி, டெல்லியின் IIC மையத்தில் நிறைவு செய்தார்.

அவருடன் மற்றொரு வாகனத்தில் மனைவியும் பயணித்துள்ளார். அவசர மருத்துவ தேவைக்காக கூடவே ஒரு ஆம்புலன்ஸும் சென்றுள்ளது. தினசரி 60-70 கி.மீ தூரம் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். காலை 6.30 மணிக்கு தொடங்கி, காலை 11.30 மணி வரை பயணம் மேற்கொள்வாராம்.

cycle journey

சாதிக்க வயது தடையில்லை 

இவரது சாதனையை வரவேற்றுக் கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற என்.ஜி.ஓ, இந்திய சர்வதேச மையத்தில்(IIC) விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்து இருந்தது. அதில் பங்கேற்று பேசிய ஹரி பாஸ்கரன், “இந்தப் பயணம் மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும் அதை தாங்கிக் கொண்டு வெற்றிகரமாக முடித்துவிட்டேன். வயதாகி விட்டால், நமது கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. சற்று கூடுதலாக உழைத்தால், எந்த வயதிலும் நினைத்ததை அடைய முடியும்” என்று கூறியுள்ளார்.

road

 தனது அனுபவம் குறித்து மேலும் கூறிய ஹரி, “ஒவ்வொரு நகரைக் கடந்து செல்லும் போது, அங்கிருக்கும் மக்கள் எங்களுடன் சேர்ந்து கொள்வர். எங்களை மிகவும் உற்சாகப்படுத்தினர். சில இடங்களில் சைக்கிள் குழுவினரும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.