300 நோயாளிகளை கொலை செய்த ஆண் செவிலியர்: நடுங்க வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்!?

 

300 நோயாளிகளை கொலை செய்த ஆண்  செவிலியர்: நடுங்க வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்!?

ஆண் செவிலியர் ஒருவர் 300 நோயாளிகளை  ஐந்து வருடங்களில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒல்டன்பெர்க்:  ஆண் செவிலியர் ஒருவர் 300 நோயாளிகளை  ஐந்து வருடங்களில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2000ம் ஆண்டு நீல்ஸ் ஹேகல்  என்ற 42 வயதுடைய ஒருவர் ஜெர்மனியில் டெல்மன்கார்ஸ்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராகச் சேர்ந்துள்ளார்.  இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு 4 நோயாளிகளைக் கொலை சேர்த்த குற்றத்திற்காகக் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார். 

murder

இந்நிலையில் அந்த மருத்துவமனையில் புதிதாக பணிக்கு வந்த செவிலியர் ஒருவர் இது குறித்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில்  செவிலியர் நீல்ஸ் ஹேகல் இதுவரை 300 நோயாளிகள் வரை கொலை  செய்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்தே இந்த விவகாரம் வெளி உலகத்திற்குத் தெரிய வந்துள்ளது. 

murder

300 நோயாளிகளை நீல்ஸ் ஹேகல் கொலை செய்யும் அளவிற்கு அங்குப் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? இத்தனை  பேர் இறந்தும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஏன்  சந்தேகம் எழவில்லை என்று அந்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

nuser

இதைத் தொடர்ந்து  கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஹேகல் மீதான வழக்கு ஜெர்மனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது வரை 100 நோயாளிகளை ஹேகல் கொலை செய்ததாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.