ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!

 

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடி இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்று தந்து வருகின்றனர். முதல் முதலாக 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தனது வெற்றியை இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் உணர்ச்சிவசமாக தெரிவித்திருந்தார்.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!

இதைத்தொடர்ந்து, வெண்கலப் பதக்கத்திற்கான பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனையை 21 – 13, 21 – 15 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார் பி.வி சிந்து. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் பிவி சிந்துவையே சேரும். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற தெலுங்கானாவை சேர்ந்த பி.வி சிந்துவுக்கு நாடெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி சிந்துவிற்கு 30 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.