30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் – அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை

 

30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் – அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை

கொரோனா பேரழிவு உலகையே மிரட்டி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கில் புதிய நோயாளிகள் அதிகரித்து வருவது பல நாடுகளுக்கும் அச்சத்தை விளைவித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 26 லட்சத்து 46 ஆயிரத்து 646 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 8 லட்சத்து 64 ஆயிரத்து 816 நபர்கள்.

30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் – அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 18 ஆயிரத்து 908 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,01,62,922 பேர்.

அமெரிக்காவில் கொரோனாவால் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டனர். அதனால், கொரோனா தடுப்பூசி உடனடியாகத் தேவை எனும் நிலை அமெரிக்காவுக்கு வந்துவிட்டது. ஃபைசர் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு அவசரக் காலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் – அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை

அதன்படி இன்றுமுதல் அமெரிக்காவில் முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் மேலும் கொரோனா தடுப்பு மருந்து அவசியம் தேவை என்போர்க்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு வாரத்தில் 30 லட்சம் டோஸ்களை அமெரிக்காவின் 50 மாகாணங்களுக்கும் கொண்டு சேர்க்கும் திட்டத்தில் படுவேகமாகப் பணிகளை அமெரிக்க சுகாதாரத் துறை பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

அதிபர் தங்கியிருக்கும் வெள்ளை மாளிகையில் பணிபுரிபவர்களுக்கு உடனே கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு, பின்னரே தடுப்பூசி போடப்படும் என ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம்.