இறைச்சி கழிவு ஏற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதல் – 3 பேர் பலி!

 

இறைச்சி கழிவு ஏற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதல் – 3 பேர் பலி!

ஈரோடு

பெருந்துறை அருகே லாரியில் இறைச்சி கழிவுகளை ஏற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் ஈஸ்வரன்கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகளிலிருந்து, கோழிக் கழிவுகளை லாரியில் ஏற்றும் பணியில், இன்று காலை 6 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூரிலிருந்து அந்த வழியாக பெருந்துறை நோக்கி சென்ற கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரியில் கோழிக் கழிவுகளை ஏற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இறைச்சி கழிவு ஏற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதல் – 3 பேர் பலி!

இந்த விபத்தில், அங்கு பணியிலிருந்த சின்னராசு, முத்தான் மற்றும் கிட்டான் ஆகியோர் சம்பவ இத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ராம்குமார், செந்தில்குமார், சின்னான் ஆகியோர் படுகாயமடைந்தனர். காரில் வந்தவர்களுக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த 3 சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழிக் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கார் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.