பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு கொரோனா!

 

பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு கொரோனா!

திண்டுக்கல்லில் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் பயிலும் 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டன. இந்த சூழலில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்தது. இதன்படி பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்ட நிலையில் , 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்ததால், பொதுத்தேர்வு வருவதையடுத்து தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இருப்பினும் திண்டுக்கல், சேலம், பழனி, சென்னை உள்ளிட்ட இடங்களில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், திண்டுக்கலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.