யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா? தபால் வாக்கை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது!

யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா? தபால் வாக்கை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது!

வருகிற சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு முறை பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அத்துடன் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தபால் வாக்குப்பதிவு முறையையே பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் தென்காசியில் தபால் வாக்குப்பதிவை வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா? தபால் வாக்கை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது!

ஆசிரியை கிருஷ்ணவேணியின் கணவர் கணேச பாண்டியன் ஒரு அரசியல் கட்சியில் உள்ளார். தபால் வாக்கை தனது கட்சிக்கு போட்டதை நிரூபிக்க போட்டோ எடுத்து அனுப்பு சொல்லியுள்ளார் கணேச பாண்டியன். கணவர் சொன்னதால் தபால் வாக்கு போட்டோ எடுத்து ஆசிரியை கிருஷ்ணவேணி போனில் அனுப்பியுள்ளார் . மனைவி அனுப்பிய தபால் வாக்கு போட்டோவை நண்பர் செந்தில்குமாருக்கு அனுப்பியுள்ளார் கணவர் கணேச பாண்டியன். இதை செந்தில்குமார் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் பரவியதால் பிரச்சனையானது.

யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா? தபால் வாக்கை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது!

இதுகுறித்து தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பழனி நாடார் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் புகார் அளித்துள்ளார் . அதில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவிவிட்டது தேர்தல் நடத்தை விதிமீறல். சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்குகளை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் பேஸ்புக், ஸ்டேட்டஸ் எதையும் வைக்க கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.