செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து; ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

 

செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து; ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னையில் இருந்து நேற்றிரவு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. செங்கல்பட்டு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக லாரியின் மீது, எதிர் திசையில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானது. சிறிதுநேரத்தில் அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று, விபத்தில் சிக்கியிருந்த லாரிகளின் மீது அதிவேகமாக மோதி சாலையின் மையப் பகுதியில் நின்றது.

இந்த கோர விபத்தில், கண்டெய்னர் லாரியை ஓட்டிவந்த ராஜஸ்தானை சேர்ந்த 23 வயது இளைஞர் சோகைல் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், லாரி ஓட்டுநர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து; ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, ராட்சத வாகனங்கள் மூலம் லாரிகளை அகற்றி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.