உலகின் டாப் 200 பல்கலைக்கழக ரேங்கில் இடம்பிடித்துள்ள 3 இந்திய பல்கலை. – பிரதமர் பெருமிதம்!

 

உலகின் டாப் 200 பல்கலைக்கழக ரேங்கில் இடம்பிடித்துள்ள 3 இந்திய பல்கலை. – பிரதமர் பெருமிதம்!

சர்வதேச அளவில் உயர் கல்வியைப் பயிற்றுவிக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழங்கங்களில் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும். குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds (QS)) என்ற அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் இந்தாண்டுக்கான பட்டியலை இன்று வெளியிட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Massachusetts Institute of Technology) தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது. இந்தாண்டும் சிறந்த பல்கலைக்கழகம் என்று பெருமையைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

Indian Institute of Science (IISc) | LinkedIn

2006ஆம் ஆண்டுக்குப் பிறகு லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் முறையாக இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. முதல் 200 இடங்களில் இந்தியாவின் மூன்று உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளன. அதன்படி மும்பை ஐஐடி 177ஆவது இடத்தையும், டெல்லி ஐஐடி 185ஆவது இடத்தையும், பெங்களூரு ஐஐஎஸ்சி 186ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. எனினும் ஆராய்ச்சி பிரிவில் உலகளவில் முதலாவது இடத்தை பெங்களூர் ஐஐஎஸ்சி பிடித்துள்ளது.

உலகின் டாப் 200 பல்கலைக்கழக ரேங்கில் இடம்பிடித்துள்ள 3 இந்திய பல்கலை. – பிரதமர் பெருமிதம்!
massachusetts institute of technology

இதற்கு மத்தியில் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அமிர்தா விஸ்வ வித்யாபீதம் ஆகிய பல்கலைக்கழகங்கள் முதல் 1,000 இடங்களிலிருந்து கீழிறங்கியுள்ளன. அந்தப் பல்கலைக்கழகங்கள் 1,001 முதல் 1,200 வரை உள்ள தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, “முதல் 200 இடங்களைப் பிடித்த மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்திய பல்கலைக்கழகங்கள் உலகளவில் இந்தியாவின் சிறப்பை உறுதிப்படுத்தவும், இளைஞர்களிடையே அறிவுசார் வலிமையை ஆதரிக்கவும் முயற்சிகள் செய்வது பாராட்டுக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.