தேர்தல் பணியில் அலட்சியம்.. சாட்டையை சுழற்றிய அதிகாரி!

 

தேர்தல் பணியில் அலட்சியம்.. சாட்டையை சுழற்றிய அதிகாரி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதே வேளையில், தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களுக்கான தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு, பாதுகாப்பு பணி போன்ற அனைத்தையும் கண்காணித்து வருகின்றனர்.

தேர்தல் பணியில் அலட்சியம்.. சாட்டையை சுழற்றிய அதிகாரி!

இதனிடையே, தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பறக்கும் படை அதிகாரிகள் மக்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். வருமான வரித்துறை சோதனையும் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தேர்தல் பணியில் அலட்சியம்.. சாட்டையை சுழற்றிய அதிகாரி!

இந்த நிலையில், தேர்தல் பணியில் அலட்சியம் காட்டியதால் பறக்கும்படை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமரவேல் உள்ளிட்டோரிடம் வால்பாறை தொகுதி தேர்தல் செலவீன பார்வையாளர் ராம்கிருஷ்ண கேடியா, அறிக்கை ஒன்றை சரிபார்க்குமாறு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அதை செய்யாமல் அலட்சியம் காட்டியதால் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.