மெட்ரோ ரயில் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

 

மெட்ரோ ரயில் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயிலில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருபவர் தினேஷ் (22). கடந்த மாதம் 8 ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு மதுரவாயல் பைப்பாஸ் சர்வீஸ் சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது. திடீரென அவரை வழிமறித்த 3 பேர் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஒரு சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுதொடர்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, மதுரவாயல் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

மெட்ரோ ரயில் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

இந்நிலையில், இன்று மதுரவாயல் சர்வீஸ் சாலை மேம்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது, கடந்த மாதம் தினேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், தங்க செயினை வழிப்பறி செய்ததை அவர்கள் ஒப்புகொண்டனர்.
மேலும் மது, கஞ்சா வாங்க பணம் தேவைப்பட்டதால் வழிப்பறி சம்வங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து
3 பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மெட்ரோ ரயில் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது