அதிமுகவை கவுத்தது ஏன்? 3 மண்டலங்கள் சொல்லும் 4 காரணங்கள்!

 

அதிமுகவை கவுத்தது ஏன்? 3 மண்டலங்கள் சொல்லும் 4 காரணங்கள்!

டந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டுமே 57 தொகுதிகளில் அதிமுக 40 தொகுதிகளை கைப்பற்றியது. வடக்கு மண்டலத்தில் உள்ள 78 தொகுதிகளில் 13 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியிருக்கிறது. தென் மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில்18 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியிருக்கிறது. மத்திய மண்டலத்தில்(டெல்டா) உள்ள 41 தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றி இருக்கின்றது.

அதிமுகவை கவுத்தது ஏன்? 3 மண்டலங்கள் சொல்லும் 4 காரணங்கள்!

இதில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சி அமைப்பதற்கு டெல்டா மாவட்டத்தின் வெற்றி முக்கியமானதாக கூறப்படுகிறது. திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய ஏழு டெல்டா மாவட்டங்களில் பெற்ற வெற்றியே திமுகவின் தனி மெஜாரிட்டி காரணமாக அமைந்திருக்கிறது.

இந்த ஏழு மாவட்டங்களிலும் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் நான்கு தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியிருக்கிறது. அதிலும் விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், நன்னிலத்தில் அமைச்சர் காமராஜ், வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ. எஸ். மணியன், ஒரத்தநாடு தொகுதியில் முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான வைத்திலிங்கம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மிச்சமுள்ள 35 தொகுதிகளை திமுக கைப்பற்றியிருக்கிறது.

அதிமுகவை கவுத்தது ஏன்? 3 மண்டலங்கள் சொல்லும் 4 காரணங்கள்!

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் இந்த 39 தொகுதிகளில் 20 தொகுதிகளை மட்டுமே திமுக கைப்பற்றியுள்ளது. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் கூடுதலாக 15 தொகுதிகளில் பெற்று 35 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது திமுக. டெல்டா மாவட்டங்களில் 35 தொகுதிகளை திமுக கைப்பற்றிய நிலையில் அதிமுக வெறும் நான்கு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் டெல்டா விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றி தான் வந்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் இடம்பெறச் செய்தது முக்கியமாக கருதப்பட்டது. அடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததும் டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் முக்கியமாக பார்க்கப்பட்டது. அப்படி இருந்தும் டெல்டா மக்கள் அதிமுகவை கவுத்தது ஏன்? டெல்டா சீனியர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர்களிடையே நாம் பேசியபோது, ’’ காவிரி வேளாண் வாரியம், பாதுகாப்பு மண்டலம் எல்லாம் சரிதான். ஆனால் கஜா புயல் விஷயத்தில் மக்கள் ரொம்ப அதிமுக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வாழ்க்கை ஆதாரங்களை இழந்து, மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அவலம்.

அதிமுகவை கவுத்தது ஏன்? 3 மண்டலங்கள் சொல்லும் 4 காரணங்கள்!

அப்படி இருக்கும்போது, கஜா புயல் அடித்ததும் உடனடியாக ஓடி வந்து ஆறுதல் சொல்லி இருக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது சொந்த ஊரில் உட்கார்ந்திருந்தார். இங்கிருக்கும் அமைச்சர்கள் ஓடி வந்து பார்த்தார்கள். ஆனாலும் எத்தனை பேர் இருந்தாலும் அது முதல்வர் வந்து பார்ப்பதற்கு ஈடாகுமா? முதல்வர் வந்து பார்க்காததால் எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகுதான் கடைசியாக அவர் வந்து பார்வையிட்டார். இதனால் டெல்டா மக்கள் மீது மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

அதிமுகவை கவுத்தது ஏன்? 3 மண்டலங்கள் சொல்லும் 4 காரணங்கள்!

சசிகலா என்றதும் மன்னார்குடி என்ற நினைவுதான் வரும். ஆனால், அவர் மன்னர்குடிக்கோ, திருத்துறைப்பூண்டிக்கோ பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஆனாலும் அவருக்கும் டெல்டாவில் ஆதரவு அலை இருக்கத்தான் செய்கிறது. அது அவர் சமூகம் சார்ந்ததாக கூட இருக்கலாம். சசிகலா விவகாரத்தினால் டெல்டா மண்டலத்தில் மட்டுமல்ல, தென் மண்டலத்திலும் அதிகமுக்கு பாதகமாகவே அமைந்திருப்பதாக தெரிகிறது.’’என்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, மற்ற மண்டலங்களிலும் அதிமுகவின் சரிவுக்கு காரணம் என்று அம்மண்டலங்களில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ’’பொதுவாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தையே சுற்றி சுற்றி வந்தார். பொழுது விடிந்தால் பொழுது போனால் அவர் எப்போதும் கொங்கு மண்டலத்தில் இருப்பதாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. அவரும் ஒட்டுமொத்த தமிழ் நாட்டுக்கு முதல்வர் என்பதை மறந்து, ஏரியா முதல்வராக செயல்பட்டதால் தான் கொங்கு மண்டலத்தில் வெற்றி வாகை சூடி இருக்கிறார். மற்ற மண்டலங்களில் எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்
.

அதிமுகவை கவுத்தது ஏன்? 3 மண்டலங்கள் சொல்லும் 4 காரணங்கள்!

முதல்வர் தான் இப்படி என்றால் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இறுதிகட்ட பிரச்சாரம் வரைக்கும் கூட வீட்டுக்குள் இருந்ததாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. முதல்வர் கொங்கு மண்டலத்தில் வேலை செய்தது மாதிரியே, துணை முதல்வர் தென் மண்டலத்தில் வேலை செய்திருந்தால் அந்த மண்டலத்தின் வாக்குகள் அதிகம் பெற்று இருக்கலாம். அவர் தென் மண்டலத்தை கண்டு கொள்ளாததால் தான் தென் மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் திமுக 40 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. அதிமுக வெறும் 18 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்திருக்கிறது.

அமைச்சர்கள் அந்தந்த தொகுதிகளில் வேலை பார்க்காமல் இல்லை. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் சிறப்பாகவே வேலை பார்த்தார்கள். முதல்வர் சொல்லித்தான் வேலை பார்த்தார்கள். ஆட்சியில் இல்லை என்றாலும் கோரிக்கையை கேட்கிறேன் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்த வந்தார்கள். அமைச்சர்கள் என்னதான் வேலை செய்தாலும் ஒரு குடும்பத்தில் குடும்ப தலைவன், குடும்ப தலைவியைத்தானே எல்லோரும் கவனிப்பார்கள். ஆனால் முதல்வர், துணை முதல்வரை தான் அவர்களின் வேலையைத் தான் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாததால் தான் அதிமுகவை டெல்டா மக்களும், தென் மண்டலத்தில் உள்ள மக்களும் இன்னும் ஏன் மத்திய மண்டலத்தில், வடக்கு மண்டலத்தில் உள்ள மக்களும் புறக்கணித்து இருப்பதாகவே தெரிகிறது’’ என்கிறார்கள்.