‘ஒரே நாளில் ரூ.3.38 கோடி வருவாய்’: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பண மழை!

 

‘ஒரே நாளில் ரூ.3.38 கோடி வருவாய்’: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பண மழை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். வரும் 25,26ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி, கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருக்கிறது. கொரோனாவால் வெளி மாநில பக்தர்கள் அனுமதிக்கப்படாத சூழலில், உள்ளூர் பக்தரகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்காக இலவச டிக்கெட் விநியோகமும் தொடங்கி விட்டது. நாளொன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

‘ஒரே நாளில் ரூ.3.38 கோடி வருவாய்’: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பண மழை!

ஜனவரி 1ம் தேதிக்கான விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதுமட்டுமில்லாமல், சிபாரிசுக் கடிதங்கள் கொண்டு வந்தாலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட நேரில் வந்து டிக்கெட் பெற்று தான் தரிசனம் செய்ய வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் திருப்பதிக்கு ரூ.3..38 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நேற்று மட்டும் 34,633 பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், ரூ.3.38 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக தெரிகிறது.