இ-பாஸ் தளர்வால் 3.25 லட்சம் பேர் சென்னைக்கு வந்துள்ளனர்! – சென்னை மாநகராட்சி கமிஷனர் கவலை

இ-பாஸ் தளர்வால் 3.25 லட்சம் பேர் சென்னைக்கு வந்துள்ளனர்! – சென்னை மாநகராட்சி கமிஷனர் கவலை

இ-பாஸ் தளர்வு காரணமாக சென்னை நகருக்குள் 3.25 லட்சம் பேர் வந்துள்ளனர். அடுத்த மூன்று மாதங்கள் மிகக் கடுமையான சோதனைக் காலமாக இருக்கும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இ-பாஸ் தளர்வால் 3.25 லட்சம் பேர் சென்னைக்கு வந்துள்ளனர்! – சென்னை மாநகராட்சி கமிஷனர் கவலை

சென்னை மாநகராட்சி கமிஷனர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து பல மாவட்டங்களில் இருந்தும் 3.25 லட்சம் பேர் சென்னை நகரத்துக்குள் வந்துள்ளனர். இவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் சென்னைக்கு வந்து செல்வோரைக் கண்காணிப்பது என்பது கடினமான காரியம். அடுத்த மூன்று மாதங்களுக்கு நமக்கு சோதனையாக காலமாக இருக்கும். இ-பாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும். ஆனாலும் சில தளர்வுகள் வழங்கப்படும்.

இ-பாஸ் தளர்வால் 3.25 லட்சம் பேர் சென்னைக்கு வந்துள்ளனர்! – சென்னை மாநகராட்சி கமிஷனர் கவலை

கொரோனா பரிசோதனைக்கு ஆட்களைப் பிடித்து வந்தால் பணம் தரப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது. இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை மக்கள் நிறுத்த வேண்டும். இப்படி தொடர்ந்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பாதிப்பு என்பது அசிங்கம் இல்லை. மக்கள் தாங்களாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதற்காக கூச்சப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை. சென்னையில் இந்த ஆண்டு இறுதி வரை முகக் கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும்” என்றார்.