3 ரியர் கேமராக்கள் கொண்ட ஹூவாய் நோவா 4இ மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

 

3 ரியர் கேமராக்கள் கொண்ட ஹூவாய் நோவா 4இ மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

சீனாவில் ஹூவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் ஹூவாய் நோவா 4இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஹூவாய் நோவா 4இ என்ற மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டபுள் கர்வ்டு கிளாஸ் பாடி கொண்ட இதில் விரல்ரேகை சென்சார் வசதியுடன் மூன்று ரியர் கேமரா செட்டப் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன் 4ஜிபி வெர்ஷன் சீனாவில் 1,999 யுவான்கள் (இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.21,000) என்றும், 6ஜிபி வெர்ஷன் 2,299 யுவான்கள் (இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.24,000) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் தான் முதலில் விற்பனைக்கு வருகிறது. கார்லாந்து ப்ளூ, பேர்ல் வொயிட் மற்றும் மேஜிக் நைட் பிளாக் ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக 6.15 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் 710 12 என்.எம். பிராசஸர், 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0 இயங்குதளம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 24 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 2 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி 120° அல்ட்ரா-வைடு கேமரா, 32 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி டைப்-சி, 3340 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளது.