3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை; தொண்டர்கள் உற்சாகம்

 

3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை; தொண்டர்கள் உற்சாகம்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் மொத்தம் 200 (தேர்தல் நடைபெற்றது 199 தொகுதிகள்) தொகுதிகளும், மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகளும், சட்டீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகளும் இருக்கின்றன. இந்த 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் 96 தொகுதிகளிலும், பாஜக 77 தொகுதிகளிலும், மத்தியபிரதேசத்தில் காங் 109 தொகுதிகளிலும், பாஜக 100 தொகுதிகளிலும், சட்டீஸ்கரில் காங் 61 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. அதிக தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.