3 மாதத்தில் ரூ.2,345 கோடி லாபம் பார்த்த விப்ரோ….

 

3 மாதத்தில் ரூ.2,345 கோடி லாபம் பார்த்த விப்ரோ….

விப்ரோ நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலண்டில் ரூ.2,345 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 6 சதவீதம் குறைவாகும்.

நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நேற்று தனது சென்ற நிதியாண்டின் 4வது காலாண்டின் (ஜனவரி-மார்ச்) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. அந்த காலாண்டில் விப்ரோவின் வருவாய் அதிகரித்துள்ளபோதிலும் லாபம் குறைந்துள்ளது. விப்ரோ நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.2,345.20 கோடி ஈட்டியுள்ளது. 2019 மார்ச் காலாண்டில் விப்ரோ நிறுவனம் லாபமாக ரூ.2,493.90 கோடி ஈட்டியிருந்தது. ஆக, கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 6 சதவீதம் குறைந்துள்ளது.

வருவாய்

கடந்த மார்ச் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 4.7 சதவீதம் அதிகரித்து ரூ.15,711 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.15,006 கோடி அளவுக்கே வருமானமாக ஈட்டியிருந்தது. மேலும் விப்ரோ ஒவ்வொரு காலாண்டு நிதிநிலை அறிக்கைகளை வெளியிடும்போது அடுத்த காலாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த மதிப்பீட்டை தெரிவிக்கும்.

விப்ரோ

ஆனால் இந்த முறை அப்படி எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. தொற்றுநோயின் போக்கை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு வர்த்தகத்தை சீர்குலைக்கும் எனபது குறித்து தங்களுக்கு தெரியவில்லை என்று நிறுவனம் தெரிவி்த்தது. இதனால் ஜூன் காலாண்டின் வருவாய் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டாம் என முடிவு செய்தது.