3 நிமிடத்துக்கு மேல் டோல் கட்டணம் கூடாது… ஆனால், 3 மணி நேரம் காத்திருக்கும் அவலம்!

 

3 நிமிடத்துக்கு மேல் டோல் கட்டணம் கூடாது… ஆனால், 3 மணி நேரம் காத்திருக்கும் அவலம்!

டோல் பிளாஸாக்களில் மூன்று நிமிடத்துக்கு மேல் எந்த ஒரு வாகனமும் காத்திருந்தால் அதற்கு டோல் வசூலிக்கக் கூடாது என்ற விதிமுறைகள் மீறி டோல் வசூலிக்கப்படுகிறது. இதனால், ஒரு வாரத்தின் முதல் நாள் டோல் பிளாசாவைக் கடக்கவே மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது

டோல் பிளாஸாக்களில் மூன்று நிமிடத்துக்கு மேல் எந்த ஒரு வாகனமும் காத்திருந்தால் அதற்கு டோல் வசூலிக்கக் கூடாது என்ற விதிமுறைகள் மீறி டோல் வசூலிக்கப்படுகிறது. இதனால், ஒரு வாரத்தின் முதல் நாள் டோல் பிளாசாவைக் கடக்கவே மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

toll

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் டோல் பிளாசாக்களை கடப்பதே மிகப்பெரிய சவால்தான். மிக நீண்ட தூரத்துக்குக் காத்திருக்கும் வாகனங்கள், மிகக் குறைவான டோல் கவுண்டர்கள் என்று கூட்ட நெரிசல், சரிச்சலுக்கு குறைவே இல்லை. வார இறுதி நாட்களில் ஊருக்கு சென்று ஞாயிறு மாலைக்கு மேல் திரும்புவோர் வாகனம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் சாலைகளும் இல்லை, சாலையை பராமரிப்பதாக கூறும் நிறுவனங்களின் டோல் மையங்களும் இல்லை. இதனால், வெள்ளிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு மாலை தொடங்கி திங்கட்கிழமை காலை வரை டோல் பிளாசாக்கள் வாகனங்களின் அணிவகுப்புப்பால் நிரம்பி வழிகிறது.

toll

டோல் பிளாசாக்களில் மூன்று நிமிடங்களுக்குள்ளாக டோல் வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த விதிமுறைகள் காற்றில்தான் பறக்கின்றன. வாகன ஓட்டிகள்தான் தங்கள் உரிமையைக் கேட்டு பெற வேண்டும் என்று கூறுகிறது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம். இது குறித்து மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.
டோல் மையங்களில் குண்டர்கள் இருப்பது தெரியாதது போலவும், அங்கு வாகனங்கள் பல மணி நேரம் காத்திருப்பது தெரியாதது போலவும் உள்ளது தேசிய நெடுங்சாலைகள் ஆணையத்தின் கருத்து. அங்கு வார இறுதி நாட்களில் ஆய்வு நடத்தினாலே டோல் மையங்களின் லட்சணத்தை கண்டறிய முடியும். ஆனாலும் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கும்படி கூறுகிறார்கள்.

nhai

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே மற்றும் தொழுப்பேடில் டோல் மையங்கள் உள்ளன. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் எல்லாம் இந்த சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். ஒவ்வொரு வாரமும் இங்கு வாகன ஓட்டிகள் அவதியுற்றுக்கொண்டேதான் உள்ளனர். 
காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோதுதான் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, இப்போது செங்கல்பட்டு தனி மாவட்டமாகவே மாறிவிட்டது. புதிய நிர்வாகமாவது மாவட்டத்தில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை களைய நடவடிக்கை எடுக்குமா என்பதுதான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.