3வது முறையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் என்னவாகும்?

 

3வது முறையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் என்னவாகும்?

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, சீரம் நிறுவனத்திடமிருந்து கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இரண்டு தடுப்பூசிகளுமே குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் போடப்பட்டுவருகின்றன.

3வது முறையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டால் என்னவாகும்?

இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்பாற்றல் கிடைக்குமா என்பது குறித்த ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் தொடங்கியுள்ளது. கோவாக்ஸின் தடுப்பூசி 81 சதவீதம் செயல்திறன் கொண்டதாக ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்தின் நோய் எதிர்ப்பாற்றலை மேலும் அதிகரிக்க மத்திய அரசின் அனுமதியோடு ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது. ஏற்கனவே மூன்றாம்கட்ட சோதனையில் 27 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.