ஏகமனதாக ஏற்பு… தீர்மானம்-2ன் முழுவிளக்கம்

 

ஏகமனதாக ஏற்பு… தீர்மானம்-2ன்  முழுவிளக்கம்

அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நேற்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தீர்மானம்-2ல், அதிமுக முதல்வர் வேட்பாளரை அங்கீகரித்து கழகபொதுக்குழுவில் ஏக மனதாக ஏற்கப்பபட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏகமனதாக ஏற்பு… தீர்மானம்-2ன்  முழுவிளக்கம்

மேலும் அத்தீர்மானத்தில், கழக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் , 2021 தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக , கழக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே.பழனிச்சாமியை அறிவித்துள்ளதை ஏகனதாக ஏற்கிறோம். வெற்றிவாகை சூட கடுமையாக உழைப்போம்.

புரட்சித்தலைவி அம்மா தனது உடல்நலனையும் பொருட்படுத்தாமல் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 32அண்டுகள்தொடர்வெற்றிசரித்திர சாதனை நிகழ்த்தினார்.

‘’எனது காலத்திற்குபிறகும் பல நூற்றாண்டுகள் அதிமுக நிலைத்திருந்து, தமிழ்நாட்டுமக்களுக்கு தொண்டாற்றும்’’ என்று அம்மா சூளுரைத்தவாறு 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் மகத்தானவெற்றிபெற்று அதிமுக வரலாறு படைக்க இருக்கிறது.

ஏகமனதாக ஏற்பு… தீர்மானம்-2ன்  முழுவிளக்கம்

இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திட கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைசருமான ஓ.பன்னீர்செலம் தலைமை கழகத்தில் கடந்த 7.10.2020 அன்று தலைமை கழக நிர்வாகிகள்,அமைச்சர்கள் , மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய கழக நிர்வாகிகள் முன்னிலையில் 2021ல் நடைபெறவுள்ள சட்டமன்றபொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக கழக இணை ஒருங்கிணைபாளரும், முதல்வருமான எடப்பாடிகே. பழனிச்சாமியை அறிவித்தார்.

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பினை இப்பொதுக்குழு அங்கீகரித்து ஏகமனதாக ஏற்றுக்கொள்கிறது.

கழகத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் ஏழை, எளிய, மக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையில் முன்னேறிச்செல்லும் முறையிலும் நல்லாட்சி நடத்தி வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமியை மீண்டும் முதல்வர் பதவிஏற்று தமிழகமக்களுக்கு தொண்டாற்ற இப்போதுக்குழு மனதார வாழ்த்துகிறது.
எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வர் பதவியில் அமர வைக்க, அதிமுகவினர் அனைவரும் அயராது உழைப்போம் வெற்றிவாகை சூடுவோம் என்று அத்தீர்மானம் சொல்கிறது.