சசிகலா வரவேற்பில் பயங்கரம்; 2 கார்கள் எரிந்து நாசம்

சசிகலா வரவேற்பில் பயங்கரம்;  2 கார்கள் எரிந்து நாசம்

கர்நாடக எல்லையில் இருந்து தமிழக எல்லை வரைக்கும் அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்து வந்தனர். அதிமுக கொடி விவகாரம் உள்பட பல விசயங்களில் அமமுகவினர் தடையை மீறித்தான் வரவேற்பு அளித்து வருகின்றனர். கொடி விவகாரத்தில் வந்துகொண்டிருந்த சசிகலா காரை வழிமறித்து நோட்டீஸ் கொடுத்தது போலீஸ்.

சசிகலா வரவேற்பில் பயங்கரம்;  2 கார்கள் எரிந்து நாசம்

இதையடுத்து கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி டோல்கோட் அருகே அமமுகவினர் சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் வெடித்தனர். ஏராளமான பட்டாசுகள் வெடித்து சிதறியதால், 2 கார்கள் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

சசிகலா வரவேற்பில் பயங்கரம்;  2 கார்கள் எரிந்து நாசம்

பட்டாசு வெடிப்பதற்கும் பேண்டு வாத்தியங்கள் இசைப்பதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை என்றும், கொடி, தோரணங்கள், பேனர்கள், பிளெக்ஸ் பேனர்கள் அனுமதி இன்றி வைக்கக்கூடாது என்றும், வி.கே.சசிகலா வாகனத்தின் பின்பு ஐந்து வாகனங்கள் மட்டுமே பின் தொடர்ந்து வர வேண்டும் என்றும் போலீசார் 6 தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். ஆனாலும், தடையை மீறி பட்டாசு வெடித்து, இரண்டு கார்களை எரித்து பதற்றமடைய வைத்துள்ளனர்.

சசிகலா வரவேற்பில் பயங்கரம்;  2 கார்கள் எரிந்து நாசம்

இதனால், சென்னை வருவதற்குள் மறுபடியும் சசிகல காரை வழிமறித்து போலீஸ் நோட்டீஸ் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

சசிகலா வரவேற்பில் பயங்கரம்;  2 கார்கள் எரிந்து நாசம்