ரஜினியை ரகசியமாக சந்தித்த ஓபிஎஸ்! 2 மணி நேர ஆலோசனையில் பேசியது என்ன?

 

ரஜினியை ரகசியமாக சந்தித்த ஓபிஎஸ்! 2 மணி நேர ஆலோசனையில்  பேசியது என்ன?

கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்ததுமே, வரவேற்கிறேன் என்று சொன்னவர் ஓபிஎஸ். வாய்ப்பிருந்தால் கூட்டணியும் அமையலாம் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர். எந்த கருத்தும் எடப்பாடியார் சொல்லாமல் இருந்தபோது ஓபிஎஸ் மட்டும் சொன்னதும் கட்சிக்குள் முரண்பாடான கொள்கை என்ற விமர்சனம் எழுந்தது.

அவர் கருத்தை அவர் சொல்லி இருக்கிறார். கருத்து யார் வேணுமானாலும் சொல்லலாம் இல்லையா என்று முதல்வரும், அமைச்சர்களும் ஓபிஎஸ் எழுப்பிய சலசலப்பை சமாளித்தார்கள்.

ரஜினியை ரகசியமாக சந்தித்த ஓபிஎஸ்! 2 மணி நேர ஆலோசனையில்  பேசியது என்ன?

இதையடுத்து எடப்பாடியார் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி தீவிரமாக களத்தில் இருந்த நேரத்தில், ஓபிஎஸ் எங்கே இருக்கிறார் என்கிற கேள்வி எழுந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்திருக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தை தானும் முன்னெடுத்து சென்றிருக்க வேண்டும். ஆனால், எங்கே இருக்கிறார் என்றே கேள்வி எழுந்த நிலையில் அவர் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார் என்றும் செய்திகள் வந்தது. வழக்கமான செய்திகளையும் அவர் ரத்து செய்துவிட்டு வீட்டுக்குள் இருக்கிறார் என்று வந்த செய்திகள் மீண்டும் அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

ரஜினியை ரகசியமாக சந்தித்த ஓபிஎஸ்! 2 மணி நேர ஆலோசனையில்  பேசியது என்ன?

அதன்பின்னரே தேர்தல் பிரச்சார தேதியையும், அதிமுக பொதுக்குழு தேதியையும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் இணைந்து அறிவித்தனர்.

இதன்பின்னர்தான், எங்கே போனார் ஓபிஎஸ் என்று பலரும் கேட்டு வந்ததற்கு, ரகசியமாக ஐதராபாத் சென்று ரஜினியை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. கட்சி தொடர்பான வேலைகளை முடுக்கிவிட்டுவிட்டு , ஸ்பைஷ்ஜெட் விமானம் மூலமாக ஐதராபாத் சென்ற ரஜினி, அங்கேயே இருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவதாகத்தான் சென்றிருந்தார். படக்குழுவினர் 6 பேருக்கு கொரோனா என்பதால் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அவசர அவசரமாக சென்னை திரும்பிய ரஜினி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஐதராபாத்தில் ரஜினியுடன் 2 மணி நேரம் ஆலோசனை செய்திருக்கிறார் ஓபிஎஸ் என்று வரும் செய்திகளால், எடப்பாடி தரப்பு அதிர்ந்து போயிருக்கிறார் என்றாலும், ஓபிஎஸ் தரப்பு இந்த செய்தியை மறுக்கிறது.

ரஜினியை ரகசியமாக சந்தித்த ஓபிஎஸ்! 2 மணி நேர ஆலோசனையில்  பேசியது என்ன?

எதையும் வெளிப்படையாக செய்யக் கூடியவர் அண்ணன். அவருகிட்ட ஒளிவு, மறைவெல்லாம் கிடையாது. இந்த அடிப்படையில்தான் ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டபோது வாழ்த்து தெரிவித்தார். இந்த அடிப்படை நாகரீகத்தைக் கூட சிலர் சந்தேகக் கண்ணோடு பார்த்தார்கள். இவர்கள்தான் இப்போது ரஜினியை சந்தித்தாக கதை கட்டியிருக்கிறார்கள் என்று சொல்லும் அவர்கள்,

கடந்த வாரத்தில் அதிமுக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், கிறிஸ்துமஸ் விழா என கட்சி சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்தான் அண்ணன் கலந்துகொண்டார். இந்த கூட்டங்களில் அண்ணன் பேசிய பேச்சுக்களே அவரது எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்பதைத்தான் அவர் வலியுறுத்தி வருகிறார்.

இதற்காக தன்னளவில் சில தியாகங்களை கூட அவர் செய்திருக்கிறார். இப்படிப்பட்டவரை களங்கப்படுத்தும் வகையில் பொய்ச் செய்திகளை பரப்புவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதுபற்றியெல்லாம் எங்களைப் போன்றவர்கள்தான் வருத்தப்படுகிறோமே தவிர அண்ணன் கொஞ்சமும் அலட்டிக் கொள்வதில்லை என்கிறார்கள்.

ரஜினியை ரகசியமாக சந்தித்த ஓபிஎஸ்! 2 மணி நேர ஆலோசனையில்  பேசியது என்ன?

பொதுவாழ்க்கையில் இருந்தால் இதுபோன்ற பொய் செய்திகள் பரப்பப்படுவது வாடிக்கைதான். இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நமது பணிகளில் குறியாக இருக்க வேண்டும் என்றுதான் அவர் எங்களிடம் சொல்லி வருகிறார். இட்டுக்கட்டப்படும் இதுபோன்ற கட்டுக் கதைகளால் ஓபிஎஸ்சின் செயல்பாடுகளை யாராலும் முடக்கிவிட முடியாது என்கிறார்கள் உறுதியுடன்.

ஆனால், ஓபிஎஸ் இன்னொரு தரப்பினரே சந்தேகத்தில்தான் இருக்கிறார்கள். ஒரு பக்கம் தர்மயுத்தம் நடத்திக்கொண்டே மறுபக்கம் தினகரனுடன் ரகசிய பேச்சு நடத்தி வந்ததாக தினரகரனே சொன்னபோது, குட்டு உடைபட்ட குற்ற உணர்ச்சிக்கு ஓபிஎஸ் ஆளாகினாலும், கூடவே நின்னு போராடிக்கிட்டு இருக்கிறோம். எப்படித்தான் ரகசியமாக சென்று தினகரனுடன் பேசிவிட்டு வந்தார் என்றே வாயடைத்து நின்றார்கள்.

அந்த அளவுக்கு 24 மணி நேரமும் உடன் நின்று போராடியவர்கள் கண்ணை மறைத்துவிட்டு ரகசியமாக சென்று தினகரனை சந்தித்தித்துவிட்டு வந்தவர் அதே ரகசிய பார்முலாவில் ரஜினியையும் சந்தித்துவிட்டு வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் சொல்கிறார்கள் ஒரு தரப்பினர்.