Home இந்தியா 2 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை

2 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை


தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மேட் மண்டலம் அனாஜ்பூரில் 2மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

2 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை
Rep Image

அனாஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கய்யாவின் மகள் பாலமணிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் பாலாமணி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். பாலாமணி நேற்று வழக்கம் போல் இரவு வீட்டில் குழந்தையை அருகில் படுக்க வைத்து தூங்கினார். விடியற்காலையில் எழுந்த பாலாமணி அருகில் படுக்க வைத்திருந்த குழந்தை காணமல் போனதை அடுத்து பெற்றோருக்கு தெரிவித்தார். பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் அனாஜ்பூரில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஏதாவது தடயம் உள்ளதா என பார்த்தனர். ஆனால் போலீசாருக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. பின்னர் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது குழந்தை சடலமாக தண்ணீர் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் உடல் வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த குழந்தையை தாய் மாமா மற்றும் அத்தையே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை கைது செய்தனர். குடும்ப சண்டையின் காரணமாக குழந்தை கொலை செய்யப்பட்டுருக்கலாம் என கூறப்படுகிறது. குழந்தை கொலை செய்து பின்னர் தொட்டியில் வீசப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“வரலாறு படைத்துள்ளீர்கள்” – ஹாக்கி கேப்டனுக்கு சர்ப்ரைஸ் கால் செய்து வாழ்த்திய பிரதமர் மோடி!

ஹாக்கியை உருவாக்கியது என்னவோ இந்தியா தான். ஆனால் நம்மிடம் ஆட்டத்தைக் கற்றுக்கொண்டு உலகின் பல நாடுகள் சர்வதேச அரங்கில் நம்மை விஞ்சி நிற்கின்றனர். நாமோ காலிறுதிக்குள் செல்வதே பெரும் சாகசமாக...

“அடுத்த 2 நாட்களுக்குள் நுழைவு வரியை கட்டியாக வேண்டும்” – நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சுப்பிரமணியம் விசாரித்தார். வழக்கு இறுதி விசாரணையின்போது...

பப்ஜி விளையாட வேண்டாமென கண்டித்த பெற்றோர்; ஆற்றில் குதித்து மாணவன் தற்கொலை!

ஆன்லைன் வகுப்புகளை கவனிக்காமல் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அப்பட்டமா நடிக்காதீங்க” – அண்ணாமலை உண்ணாவிரதத்தை கலாய்த்த திருமாவளவன்!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மேகதாது அணைக்கு எதிராக ஓரணியில் இருக்கின்றனர். அனைவருடைய குரலும் ஒன்றாக ஒலிக்கிறது. ஆனால் தமிழக பாஜகவின் நிலை தான் பரிதாபத்தில் இருக்கிறது. ஏனெனில் கர்நாடகாவில் ஆள்வது...
- Advertisment -
TopTamilNews