‘டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை’… எத்தனை கோடிக்கு மதுவிற்பனை தெரியுமா?

 

‘டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை’… எத்தனை கோடிக்கு மதுவிற்பனை தெரியுமா?

தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கிறிஸ்துமஸ், நியூ இயர் உள்ளிட்ட பண்டிகை தினங்களுக்கு முன் நாளில் மதுவிற்பனை ஜோராக நடப்பது வழக்கமான ஒன்று தான். அந்த ஒரு நாளில் மட்டுமே ரூ.200 கோடிக்கு மேல் மதுவிற்பனையாகும். தற்போது ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் குடிமகன்கள் சனிக்கிழமையே வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.

‘டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை’… எத்தனை கோடிக்கு மதுவிற்பனை தெரியுமா?

மே 1 (இன்று) உழைப்பாளர்கள் தினம் என்பதாலும் நாளை வாக்கு எண்ணிக்கை என்பதாலும் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் இயங்காது என கடந்த வாரமே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், நேற்று இரவு டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவதற்கும் சேர்த்து மது பாட்டில்களை வாங்கி குவித்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.63.44 கோடி, மதுரை- ரூ. 59.63 கோடி, சேலம்- ரூ.55.93 கோடி, கோவை- ரூ.56.37 கோடி, திருச்சி- ரூ.56.72 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.