நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம் – தமிழில் பேசி பொறுப்பேற்றுக்கொண்ட விஜய் வசந்த்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம் – தமிழில் பேசி பொறுப்பேற்றுக்கொண்ட விஜய் வசந்த்

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் வசந்த் இன்று எம்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழில் பொறுப்பேற்றுக் கொண்டவர் பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜீவ்காந்தி வாழ்க என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம் – தமிழில் பேசி பொறுப்பேற்றுக்கொண்ட விஜய் வசந்த்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது மறைந்த எம்.பி. களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம் – தமிழில் பேசி பொறுப்பேற்றுக்கொண்ட விஜய் வசந்த்

பின்னர் மீண்டும் தொடங்கிய கூட்டத்தொடரில் இடைத்தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர் . அதன்பின்னர் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துவைத்து வைத்தார். அப்போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் காலமானதை அடுத்து அங்கு நடந்த இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இன்று எம்பியாக பதவி ஏற்றுக்கொண்ட போது, தமிழில் பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற பின்னர் பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜீவ்காந்தி வாழ்க என்று தெரிவித்தார்.