கைலாசாவில் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி

 

கைலாசாவில் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி

கைலாசாவில் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி இருக்கிறது. கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் கைலாசாவுக்கு வந்துவிடுங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் நித்தியானந்தா.

கைலாசாவில் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி

பல்வேறு வழக்குகளால் துரத்தப்படும் நித்தியானந்தா, தனது கால் பட்டால்தான் இந்தியாவில் இருந்து கொரோனா ஓடும் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். தற்போது அவர் கொரோனா 3வது அலை குறித்த வீடியோவினை வெளியிட்டிருக்கிறார்.

அதில், இந்தியாவில் மக்கள் சுதந்திரமாகவும், கூட்டம் கூட்டமாகவும் செல்வதை பார்க்கும்போது கொரோனா 3வது அலையை வரவேற்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தி.நகர் ரங்கநாதன் தெருவில் கூட்டத்தை பார்த்தால் கொரோனாவே இறந்துவிடும் போலிருக்கிறது.

கைலாசாவில் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி

நான் என் பக்தர்களுக்கு எச்சரிக்கையாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். 3வது அலையில் பாதிப்பு அதிகமாக இருக்கும். உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும். மல்டி லேயர் குவாரண்டைன் மட்டுமே உங்களை காக்கும். அதனால் பாதுகாப்பாக இருங்கள்.

கைலாசாவில் மல்டி லேயர் வசதி இருக்கிறது. கொரோனாவில் இருந்து தப்பித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கைலாசாவுக்கு வந்துவிடுங்கள். நீங்கள் மட்டுமல்லாது நீங்கள் அதிகம் நேசிப்பவர்களையும் கைலாசாவுக்கு அழைத்து வந்துவிடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.