குஷ்புவுக்கு முக்கிய பதவி.. டெல்லியில் முகாம்

 

குஷ்புவுக்கு முக்கிய பதவி.. டெல்லியில் முகாம்

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக டெல்லியில் முகாமிட்டு பாஜக மூத்த நிர்வாகிகளை சந்தித்து வந்தார் எல்.முருகன். முருகன் ஏன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என்ற பரபரப்பு எழுந்த நிலையில், அவர் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குஷ்புவுக்கு முக்கிய பதவி.. டெல்லியில் முகாம்

இந்நிலையில் குஷ்பு டெல்லியில் முகாமிட்டு பாஜக மூத்த நிர்வாகிகளை சந்தித்து வருவது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குஷ்புவுக்கு முக்கிய பதவி.. டெல்லியில் முகாம்

குஷ்புவுக்கு செல்வாக்கும் அதிகம் என்பதால் அவர் கட்சியில் முக்கிய பதவியை எதிர்பார்க்கிறார். இதனால்தான் அவருக்கு இன்னமும் கட்சியில் பதவி கொடுக்கப்படாமல் இருக்கிறது.

குஷ்புவுக்கு முக்கிய பதவி.. டெல்லியில் முகாம்

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டிட்டு திமுக வேட்பாளருக்கு கடுமையான போட்டியாளராக இருந்தார் குஷ்பு. அவர் அத்தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே கருத்து கணிப்புகள் சொல்லின. அதனால் குஷ்புவின் மேல் உள்ள செல்வாக்கினை டெல்லி தலைமை கவனித்திருக்கிறது. அதனால்தான் அமித்ஷாவே வந்து குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

குஷ்புவுக்கு முக்கிய பதவி.. டெல்லியில் முகாம்

நடந்து முடிந்த தேர்தலில் தோற்றாலும் அவர் தேர்தலில் ஏற்படுத்திய பரபரப்பு கட்சி கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சரானார். தமிழ பாஜகவில் துணைத்தலைவராக இருந்த அண்ணாமலை தலைவராகி இருக்கிறார். இதனால் தனக்கும் கட்சியில் உரிய அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்கிறார் குஷ்பு.

குஷ்புவுக்கு முக்கிய பதவி.. டெல்லியில் முகாம்

இதையடுத்து அவர் டெல்லியில் முகாமிட்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிஷன் ரெட்டி, முருகன், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோரை சந்தித்து பேசி வருவதாகவும், கட்சியும் குஷ்புவுக்கு முக்கிய பதவியை வழங்க இருப்பதாகவும் தகவல்.