நடிகர் ரகுமான் தாயார் காலமானார்

 

நடிகர் ரகுமான் தாயார் காலமானார்

பிரபல நடிகர் ரகுமான் தாயார் சாவித்ரி (84) பெங்களூருவில் காலமானார். அவரது இறுச்சடங்கு கேரளாவில் நடக்கிறது.

நடிகர் ரகுமான் தாயார் காலமானார்

அபிதாபியில் 1967ல் பிறந்த ரசின் ரகுமான் சினிமாவில் ரகுமான் ஆக அறிமுகமானார். 1983ல் ’கூடுவிடே’ மலையாள படத்தின் மூலம் அறிமுகமான ரகுமான் 1986ல் ‘நிலவே மலரே’படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கண்ணே கனியதமுதே, வசந்த ராகம், மீண்டும் மகான், அன்புள்ள அப்பா, ஒருவர் வாழும் ஆலயம், படத்தில் நடித்துவிட்டு 89ல் புது புது அர்த்தங்கள் படத்தின் மூலம் தமிழில் பிரபலம் ஆனார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அமீர் இயக்கத்தில் ஜீவா நடித்த ராம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அதன்பின்னர் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் வில்லன் கேரக்டரிலும் நடித்து அசத்தினார்.

நடிகர் ரகுமான் தாயார் காலமானார்

ரகுமானின் கே.முகமது அப்துல் ரஹ்மான் காலம் சென்றுவிட்டார். ரகுமானுடன் பிறந்தவர் டாக்டர் ஷமீம் . ரகுமான் 1993ல் திருமணம் செய்துகொண்டார். இவரது மனைவி மெஹெருன்னிசா இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானின் மனைவி சைரா பானுவின் சகோதரி.

14.7.2021 மதியம் 3.30 மணிக்கு பெங்களூருவில் சாவித்ரி காலமானார். இவரது இறுதி சடங்கு இன்று காலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள நிலம்பூரில் நடைபெறுகிறது.