பின்வாங்கிய ரஜினிகாந்த் மீண்டும் பின்வாங்கியதாக அறிவிக்க இதுதான் காரணம்!

 

பின்வாங்கிய ரஜினிகாந்த் மீண்டும் பின்வாங்கியதாக அறிவிக்க இதுதான் காரணம்!

கொரோனாவினால் தயங்கிக்கொண்டிருந்த நிலையில் உயிரே போனாலும் பரவாயில்லை என்று தீவிர அரசியலில் இறங்கி தேர்தலை சந்திக்க இருந்த ரஜினிகாந்த், திடீரென்று அரசியலை விட்டு விலகுகிறேன் என்று அறிவித்தார். கொரோனா அச்சத்தையும் மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் அப்போது காரணம் காட்டினார். இதனால், பூத் கமிட்டிகள் அமைத்து தேர்தலை சந்திக்க தயாராக இருந்த ரஜினி ரசிகர்கள் நிற்கதியாய் நின்றார்கள்.

பின்வாங்கிய ரஜினிகாந்த் மீண்டும் பின்வாங்கியதாக அறிவிக்க இதுதான் காரணம்!

இதையடுத்து மன்ற நிர்வாகிகள் அவரவர் விருப்பம்போல் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்துகொள்ளலாம் என்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இனி ரஜினி அரசியலுக்கே வரமாட்டார் என்பதை போல்தான் ரஜினி மக்கள் மன்றத்தின் அறிவிப்பு இருந்தது.

பின்வாங்கிய ரஜினிகாந்த் மீண்டும் பின்வாங்கியதாக அறிவிக்க இதுதான் காரணம்!

இதையடுத்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்தார் ரஜினி. கொரோனா தடுப்பூசி தயாராகி கொண்டிருந்த நிலையில், தடுப்பூசி வருமா? அது வந்தால் என் உடல்நிலைக்கு ஒத்து வருமா? என்றெல்லாம் கவலை தெரிவித்திருந்த ரஜினிகாந்த், கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டார். அதன்பின்னர் அவரின் உடல்நலனில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால், உற்சாகம் ஆனார்.

பின்வாங்கிய ரஜினிகாந்த் மீண்டும் பின்வாங்கியதாக அறிவிக்க இதுதான் காரணம்!

இதையடுத்து அவர் சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா சென்று மயோ கிளினிக்கில் உடல்பரிசோதனைகள் செய்துகொண்டார். உடல்பரிசோதனைகளுக்கு பின்னர் அவர் அமெரிக்காவில் சில நாட்கள் ஓய்வெடுத்தார்.

மயோ கிளினிக்கில் சிறுநீரக மாற்று அறுவை செய்துகொண்டுள்ள ரஜினிகாந்த், வருடம் ஒருமுறை வந்து உடல்பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் என்று மயோகிளினிக் முன்னர் சொல்லி இருந்த நிலையில், தற்போது நடந்த உடல்பரிசோதனைக்கு பின்னர் இனிமேல் ஐந்து வருடத்திற்கு பின்னர் வந்து உடல்பரிசோதனை செய்துகொண்டால் போதும். அதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது என்று மயோ கிளினிக் உறுதி அளித்திருப்பதாக தகவல் வெளியானது.

பின்வாங்கிய ரஜினிகாந்த் மீண்டும் பின்வாங்கியதாக அறிவிக்க இதுதான் காரணம்!

அண்ணாத்த படம் தான் தனது சினிமா வாழ்க்கையில் கடைசி படமாக இருக்கலாம் என்று கண்ணீர் கசிய சொல்லிய ரஜினிக்கு, மயோ கிளினிக் நம்பிக்கை தந்துள்ளது. அதனால்தான் அவர் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிப்பதாக தகவல் வந்தன.

அரசியலில் இருந்து ரஜினி பின்வாங்கியதற்கு 90 சதவிகித காரணம், உடல்நிலையை கருத்தில் கொண்டுதான் என்கிறது ரஜினிக்கு நெருங்கிய வட்டாரம். ரஜினியும் அதைத்தான் சொல்லி இருந்தார். ஆகவே, ஐந்து ஆண்டுகளுக்கு உடல் ஆரோக்கியம் பற்றி எந்த கவலையும் படவேண்டிய அவசியம் இல்லை என்பதால்தான் அவர் மீண்டும் அரசியலுக்கு வரும் முடிவினை எடுத்திருக்கிறார் என்ற தகவல் பரவின.

அதனால்தான் இன்று அவர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார். 35 மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தி வந்தார்.

பின்வாங்கிய ரஜினிகாந்த் மீண்டும் பின்வாங்கியதாக அறிவிக்க இதுதான் காரணம்!

நிர்வாகிகள் கூட்டத்திற்கு முன்பு தனது போயஸ்கார்டன் இல்லத்தின் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லவில்லை. எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா என்ற கேள்வி இருக்கிறது. அதுகுறித்து மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை சொல்வேன் என்று கூறினார்.

உடல்நிலை பற்றிய கவலை போனதால்தான், அவர் இன்றைக்கு முகக்கவசத்தினை கழற்றிவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். ராகவேந்திரா மண்டபத்திற்குள் காரை விட்டு இறங்கி செல்லும்போதும் கூட அவர் முகக்கவசதை கழற்றிவிட்டே சென்றார்.

ஆனால், மக்கள் மன்றம் இருப்பதால்தான் எதிர்காலத்தில் தான் கட்சி ஆரம்பிக்கப்போவதாக ஒரு பேச்சு இருப்பதால் அந்த பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் மக்கள் மன்றத்தினை கலைத்துவிட்டு ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றியிருக்கிறார்.

ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல ரஜினியிடமும் இருந்து கொஞ்ச நஞ்ச அரசியல் கனவும் கருகிப்போக காரணம், கமல்ஹாசனின் அரசியல் தோல்விதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பின்வாங்கிய ரஜினிகாந்த் மீண்டும் பின்வாங்கியதாக அறிவிக்க இதுதான் காரணம்!