தோப்பு வெங்கடாசலம் வாகனத்தில் ஸ்டாலின் – உதயநிதி

 

தோப்பு வெங்கடாசலம் வாகனத்தில் ஸ்டாலின் – உதயநிதி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணையவிருக்கிறார். இதையடுத்து, யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதற்கு ஏற்ப அவரது பிரச்சார வாகனத்தில் கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி படங்கள் இடம்பெற்றுள்ளன.

தோப்பு வெங்கடாசலம் வாகனத்தில் ஸ்டாலின் – உதயநிதி

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தேர்தல் நேரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தோப்பு வெங்கடாசலம் இன்று திமுகவில் இணையவிருப்பதாக தகவல்.

தோப்பு வெங்கடாசலம் வாகனத்தில் ஸ்டாலின் – உதயநிதி

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றிருந்த தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்த தேர்தலில் சீட் கொடுக்காததால், அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்தான் வெற்றி பெற்றார்.

தோல்விக்கு பின்னர், அவர் செந்தில்பாலாஜி மூலமாக திமுகவில் சேர முயன்று வருவதாகவும், அதுவும் இன்றைக்கு அவர் திமுகவில் இணைய அதிகம் வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல்.

தோப்பு வெங்கடாசலம் வாகனத்தில் ஸ்டாலின் – உதயநிதி

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதற்கு ஏற்ப, அவர் திமுகவில் இணைவதற்கு முன்பே, அவரது பிரச்சார வாகனத்தில் கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பிரச்சார வாகன படம் இணையங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து, ’திமுக புகழ் பாட புறப்பட்டுவிட்டார் மாஜி அதிமுக அமைச்சர்’ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.