கமல்ஹாசனுக்கு பாஜக கொடுத்த பதிலடி

 

கமல்ஹாசனுக்கு பாஜக கொடுத்த பதிலடி

நடந்த முடிந்து சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்த கமல்ஹாசன் குறித்து பாஜக கமெண்ட் அடித்திருக்கிறது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்த கமல்ஹாசனுக்கு பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது.

கமல்ஹாசனுக்கு பாஜக கொடுத்த பதிலடி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 15 பேர் கேபினட் அமைச்சர்கள். மீதமிருக்கும் 28 பேர் இணை அமைச்சர்கள். புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து தேர்வாகி, மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல். முருகனுக்கு மீன்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கால்நடை மற்றும் பால்வளத் துறை இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசனுக்கு பாஜக கொடுத்த பதிலடி

இதுகுறித்து மக்கள் நீதிமய்யம் கமல்ஹாசன், ‘’தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். ’’ என்றார். மேலும், ‘’நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?’’பதிவிட்டிருந்தார்.

”தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழமுடியவில்லையா? நல்ல வேளை. தமிழகத்திற்கு இப்படி ஒரு சட்ட மன்ற உறுப்பினர் கிடைக்கவில்லேயே என்று மகிழ முடிகிறது.’’ என்று தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.