மாஜியின் பிடிவாதம்… தர்மசங்கடத்தில் முதல்வர்!

 

மாஜியின் பிடிவாதம்… தர்மசங்கடத்தில் முதல்வர்!

தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பங்களாக்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்திருக்கின்றன. இந்த அரசு பங்களாக்களில்தான் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குடும்பத்துடன் தங்க பொதுப்பணித்துறை அனுமதி வழங்கி வருகிறது.

மாஜியின் பிடிவாதம்… தர்மசங்கடத்தில் முதல்வர்!

புதிய ஆட்சி வந்ததும் முன்பு இருந்தவர்கள் உடனே காலி செய்து விடுவது வழக்கம். அப்படி செய்யாத பட்சத்தில் பொதுப்பணித்துறை முறைப்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி காலி செய்ய உத்தரவிடும்.

கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து அதிமுக ஆட்சியில் இருந்து வந்ததால் அமைச்சர்கள் பலரும், சபாநாயகரும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அந்த பங்களாக்களில் தங்கியிருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாக்களில் தான் தங்கியிருந்தனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் பொதுப்பணித்துறை அரசு பங்களாவை ஒதுக்கி இருக்கிறது. அதுவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது தங்கியிருந்த அதே பங்களாவிலேயே எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால். இது ஸ்டாலினின் பெருந்தன்மை என்று பலரும் சொல்லி வருகின்றனர்.

மாஜியின் பிடிவாதம்… தர்மசங்கடத்தில் முதல்வர்!

இது ஒருபுறமிருக்க, அதிமுக அமைச்சர்கள் பலரும் அரசு பங்களாக்களை காலி செய்து விட்ட நிலையில் முன்னாள் சபாநாயகர் தனபால் இன்னமும் அரசு பங்களாவை காலி செய்யவில்லையாம். அந்த அரசு பங்களா தான் தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு ஒதுக்கி இருக்கிறது பொதுப்பணித்துறை.

தாமாக முன்வந்து அரசு பங்களாவை காலி செய்யாததால் பொதுப்பணித்துறை காலி செய்ய உத்தரவிட்டு அவருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நோட்டீஸ் அனுப்பிய பின்னரும் கூட தனபால் இன்னமும் அரசு பங்களாவை காலி செய்யவில்லையாம். இதனால் தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு பங்களாவை ஒதுக்க முடியாமல் பொதுப்பணித்துறை தவிப்பில் இருக்கிறது.

மாஜியின் பிடிவாதம்… தர்மசங்கடத்தில் முதல்வர்!

இந்த விவகாரத்தில் அதிரடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் தர்மசங்கடத்தில் இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும் இந்த பொறுமை ஒரு அளவுக்குத்தான் இருக்கும் என்கிறார்கள். விரைவில் மானியக் கோரிக்கை பட்ஜெட் துவங்க இருக்கும் நிலையில் அப்பாவுக்கு அதற்குள்ளாவது பங்களாவை ஒதுக்கித் தர வேண்டும் என்கிற நெருக்கடியில் இருக்கிறது பொதுப்பணித்துறை.