நலமுடன் உள்ளார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்

 

நலமுடன் உள்ளார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ்(வயது84) தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்திருக்கிறது.

நலமுடன் உள்ளார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனயில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சையின் காரணமாக அவர் அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்தோலிக்க அமைப்பினால் நடத்தப்படும் அந்த மருத்துவமனையில் 10 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். குடல் பிரச்சனை காரணமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.