28 நாட்களில் 100 கோடி ரூபாய் வருமானம்…சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொட்டும் பணமழை !

 

28 நாட்களில் 100 கோடி ரூபாய் வருமானம்…சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொட்டும் பணமழை !

நடை திறக்கப்பட்டதிலிருந்து  தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் மாலைபோட்டு விரதம் இருந்து ஐயப்பனைத்  தரிசித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு மகர பூஜை மற்றும் மண்டல விளக்குப் பூஜைக்காக நடை திறக்கப்படும்.கார்த்திகை பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இந்த மாதம் 27-ந் தேதியும், மகர விளக்குப் பூஜை ஜனவரி 15-ந் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 

ttn

நடை திறக்கப்பட்டதிலிருந்து  தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் மாலைபோட்டு விரதம் இருந்து ஐயப்பனைத்  தரிசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கோவில் வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 60 நாட்களிலும் சேர்த்தே 60 கோடி ரூபாய் வருமானம் வந்தது. ஆனால், இந்த ஆண்டு நடை  திறந்து 28 நாட்களிலேயே கோவிலின் வருமானம் ரூபாய் 100 கோடியை எட்டியுள்ளது. தரிசிக்க வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, அப்பம் மற்றும் அரவணை பிரசாதங்கள் மூலமாக இந்த வருமானம் கிடைத்துள்ளது. 

ttn

பூஜைக்காகத் திறக்கப்பட்ட நடை மூடுவதற்கு இன்னும் 30 நாட்களுக்கு மேல் உள்ளதாலும், பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் கோவில் வருமானம் இன்னும் அதிகரிக்கும் என்று சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.